தமிழின் பழம்பெரும் காமெடி நடிகராக திகழும் கவுண்டமணி, ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜய், அஜித், சிம்பு, போன்ற முன்னணி நடிகர்கள் பலருடனும் காமெடி ரோலில் கலக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கவுண்ட்டர் காமெடிக்கு என்றே தனி ரூட் போட்டுக்கொடுத்தவர் கவுண்டமணிதான்.
தனது யதார்த்த நகைச்சுவையின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா பிடித்தார் கவுண்டமணி. கவுண்டமணி தற்போது எந்த திரைப்படங்களிலும் தலைக்காட்டுவதில்லை என்றாலும், அவரது காமெடிகள் காலத்தை கடந்தும் பேசப்படும்.
கவுண்டமணி இயல்பிலேயே மிகவும் நகைச்சுவை சுபாவம் உள்ளவர் என்றுதான் அவருடன் பழகிய பலரும் கூறி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகை ஷார்மிளி கவுண்டமணி குறித்து வேறு மாதிரியான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
“கவுண்டமணி அவ்வளவாக பேசமாட்டார். குறிப்பாக காமெடி காட்சிகளில் அவருடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு எந்த நிமிடத்தில் எப்படி நடிக்கவேண்டும் என்றும் சொல்லித்தர மாட்டார். ஒரு காமெடியனாக அதை அவர் சொல்லித்தர வேண்டும்.
அவர் ஒரு வசனத்தை கூறினால், அடுத்தது யார் எந்த வசனம் பேசவேண்டும், எந்த நிமிடத்தில் பேச வேண்டும் என்பதை கவுண்டமணி சொல்லித்தர மாட்டார். ஆதலால் அவருடன் நடிக்கும்போது நாமேதான் புரிந்துகொண்டு நடிக்கவேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “என்னை பொறுத்தவரை கவுண்டமணி ஜாலியான ஆள் எல்லாம் கிடையாது. அவர் ஹீரோக்களிடம் வேண்டுமானால் ஜாலியாக இருப்பார். ஆனால் சக காமெடி நடிகர்களுடன் அப்படி இருக்க மாட்டார்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த்…
திரைப்பட இயக்குனர்…
Atee: தமிழ்…
Biggboss Tamil:…
நடிகர்கள் என்பவர்கள்…