பாலா போட்ட ஒரே ஒரு கண்டீசன்.... சேது பட வாய்ப்பை தவறவிட்ட வில்லி நடிகை...
![sethu movie sethu movie](http://cinereporters.com/wp-content/uploads/2022/03/sethu-movie.jpg)
இயக்குனர் பாலா இன்றுவரை கோலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது இயக்கத்தில் வெளியான சேது படம் தான். அந்த சமயத்தில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததுடன் படத்தின் நாயகன் விக்ரமுக்கும் ஏகப்பட்ட புகழை பெற்று தந்தது.
மேலும், விக்ரமுக்கு அடுத்தபடியாக நாயகி அபிதாவும் பலரது பாராட்டுகளை தட்டி சென்றார். நாயகிக்கான சரியான தேர்வு அபிதா தான் என்றெல்லாம் பலர் அவரை புகழ்ந்தனர். ஆனால் உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வாகி இருந்தவர் பிரபல சீரியல் வில்லி நடிகை ஷில்பா தான்.
சேது படத்தின் வாய்ப்பை தவறவிட்டது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷில்பா கூறியதாவது, "பாலா சார் ஆடிஷனுக்கு தாவணி கட்டி வர சொன்னார். ஆடிஷன் முடிந்து பத்து நாள் கழித்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்கள். படம் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம். ஆனால், அதுவரை நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என கண்டீசன் போட்டார்.
ஆனால் அந்த சமயத்தில் எனக்கு சீரியலில் அதிகமான வாய்ப்புகள் வந்தன. மேலும் நான் பல தொடர்களில் நடித்து வந்தேன். எனவே, சேது படத்தை மிஸ் செய்துவிட்டேன். இருப்பினும் அது குறித்து எனக்கு கவலை எதுவும் இல்லை. ஏனெனில் சீரியலில் நான் பல வெரைட்டியான கேரக்டரில் தொடர்ந்து நடித்து விட்டேன்" என கூறியுள்ளார்.
தற்போது ஷில்பா சின்னத்திரையில் தலைகாட்டவில்லை என்றாலும், அவர் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயத்தில் வெள்ளித்திரையில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஷில்பாவோ சீரியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.