தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நடிகை ஷோபா திடீரென தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வந்த சாமந்திப்பூ ஷூட்டிங்கினை எப்படி முடித்தார்கள் தெரியுமா?
சிவக்குமார், விஜயகாந்த், ஷோபா ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் சாமந்திப்பூ. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. படத்திற்கு மலேசியா வாசுதேவன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் நாயகியாக நடித்தவர் ஷோபா. தமிழில் தட்டுங்கள் திறக்கப்படும் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தொடர்ச்சியாக இவருக்கு நாயகி வாய்ப்புகள் வரும் போது, இயக்குனர் பாலு மகேந்திராவை தனது 16 வயதில் திருமணம் புரிந்தார்.
இந்நிலையில் தான் அவர் சாமந்திப்பூ படத்தில் நடித்து வந்திருக்கிறார். ஆனால் படத்தின் பாதியிலேயே திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அவரின் காட்சிகள் இல்லாமல் படத்தினை என்ன செய்வது என அந்தத் தயாரிப்பாளர்கள் குழம்பி இருக்கிறார்கள். இதற்கு உதவி செய்ய முன் வந்தவர் எடிட்டர் மோகன்.
அப்படத்தில் ஷோபா நடித்து ஓகே செய்யப்படாத படமாக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் சேகரித்து இருக்கிறார். அதிலிருந்து சில நல்ல ஷாட்டுகளை மட்டும் தனியே எடுத்தாராம். பின்பு, ஷோபா உடலமைப்பு ஒத்த டூப் போட்டு லாங் ஷாட்டில் சில காட்சிகளை படமாக்கி கூறி இருக்கிறார். அவர் சேகரித்த ஷாட்களுடன் இணைத்து படத்தினை ஒரு வழியாக முடித்து கொடுத்தாராம் எடிட்டர் மோகன். இவர் இயக்குனர் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில்…
Vettaiyan: பொதுவாக…
இயக்குனர் சிறுத்தை…
மகிழ்திருமேனி இயக்கத்தில்…
சுந்தரி சீரியலில்…