இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஷோபனாவா? எல்லாருக்கும் ஃபேவரைட்.. என்ன பாடல் தெரியுமா?

by Rohini |
shobana
X

shobana

Actress Shobana: தமிழ் சினிமாவில் 90களில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை ஷோபனா. பரத நாட்டியத்தில் தலை சிறந்தவரான ஷோபனா நடிகை பத்மினியின் குடும்ப வாரிசு. அதனால் பரதம் இவருக்கு கைவந்த கலை. சினிமாவிற்கு பிறகு ஷோபனா இப்போது நாட்டியப் பள்ளி வைத்து பல மாணவர்களுக்கு பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறார்.

அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில் ஷோபனாவை பார்க்க முடியும் .ஆனால் இப்போதைக்கு எந்த படங்களிலும் நடிப்பதாக இல்லை. போடா போடி படத்தில் நடித்திருப்பார். பல படங்களில் ஷோபனா நடித்திருந்தாலும் அவரின் கெரியரில் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருப்பது தளபதி திரைப்படம்.

இதையும் படிங்க: பட்டன் இல்லாத டிரெஸ் தூக்கத்தை கெடுக்குது!.. பசங்க மனசை கெடுக்கும் பூஜா ஹெக்டே!..

ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஷோபனா அந்தப் படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் ஷோபனா குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுவரை ஷோபனா ஒரு நல்ல பரத நாட்டியக் கலைஞர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.

அதுவும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு பாடலில் நடனம் அமைத்துக் கொடுத்தது ஷோபனாதானாம். மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ராவணன். இந்தப் படம் வெளியான போது படத்தின் பெயரை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியது.

இதையும் படிங்க: சமையல் பிசினஸுக்குள் இறங்கும் கோபி!… இனி யார் ஜெயிக்க போறாங்க கோபியா? பாக்கியாவா?

ராமன், ராவணன், சீதை இவர்களின் கதையை கருவாக வைத்துதான் மணிரத்தினம் இந்தப் படத்தை எடுத்திருப்பார். இதில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக பிரித்விராஜ் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராயும் பிரித்விராஜும் சேர்ந்து டூயட் பாடும் பாடலான கல்வரே என்ற பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலாக அமைந்தது.

இந்தப் பாடலில் ஐஸ்வர்யா ராய் வளைந்து நெழிந்து அழகாக பரத நாட்டியம் ஆடியிருப்பார். இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டரே ஷோபனாதான் என்ற செய்தி இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: எல்லாத்துலயும் ஒதுங்கி இருக்கும் அஜித்! இத மட்டும் எப்படி பண்ணுவார்? அல்லோலப்படும் திரையுலகம்

Next Story