மழைல அந்த சீனு.. உள்ள ஒன்னும் போடல!.. ரஜினியால என் மானம் தப்பிச்சுச்சு.. ரகசியத்தை பகிர்ந்த நடிகை..
தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் என்றால் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைகின்றது. ரஜினியின் ஒவ்வொரு படங்களின் ரிலீசும் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போலவே அமைந்து விடுகின்றன. எம்ஜிஆரை போன்று ரஜினியும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க நடிகராகவே காணப்படுகிறார்.
இப்ப உள்ள ரஜினியின் படங்களை விட 80களில் ரிலீசான ரஜினியின் படங்கள் தான் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு ஒரு வித காரணமாக அமைவது இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் தான். ரஜினியின் படங்கள் மட்டும் இல்லாமல் 80களில் பெரும்பாலான படங்கள் ஹிட்டானதுக்கு இளையராஜாவின் பாடல்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.
இந்த நிலையில் பிரபல நடிகை ஷோபனா ரஜினியை பற்றி ஒரு ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார். மேலும் இது தனக்கும் ரஜினிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம் என்பதையும் தெளிவுபட கூறி இருக்கிறார். ஷோபனா கூறியதைப் போல ரஜினி இன்று வரை எந்த மேடைகளிலும் இந்த ஒரு ரகசியத்தை பகிர்ந்தது இல்லை என்று தான் கூற வேண்டும்.
ரஜினியும் சோபாவும் இணைந்து சிவா மற்றும் தளபதி போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இரு படங்களும் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற வெற்றி படங்களாகவே அமைந்தன. அதிலும் குறிப்பாக தளபதி படம் எப்பெயர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்த நிலையில் சிவா படத்தில் தனக்கு நேர்ந்த ஒரு சங்கடத்தை பற்றி ஷோபனா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்தப் படத்தில் இரு விழியின் வழியே என்ற ஒரு பாடல் இடம் பெற்று இருக்கும் .அந்தப் பாடல் மழை நேரத்தில் எடுக்கப்பட்டதை போல வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலில் ரஜினிக்கும் ஷோபனாவிற்கும் வெள்ளை நிற ஆடையே கொடுத்திருப்பார்கள்.
ஆனால் இதைப்பற்றி எதுவுமே ஷோபனாவிற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லையாம். ஆடை உதவியாளர் வெள்ளை நிற சேலையை ஷோபனாவிடம் நீட்ட அதைப் பார்த்ததும் ஷோபனா ஷாக் ஆகிவிட்டாராம். ஏனெனில் அதற்கு வேண்டிய உள்ளாடைகள் எதுவுமே ஷோபனா எடுத்துக்கொண்டு வரவில்லை என்பதுதான். வெள்ளை நிற சேலை மற்றும் உள்பாவாடை எதுவும் இல்லாமல் எப்படி மழை சீனில் நடிப்பது என தவித்துக் கொண்டு இருந்தாராம் ஷோபனா.
ஒரு வேலை அறையில் போய் எடுத்துக்கொண்டு வந்தாலும் அன்றைய படப்பிடிப்பு ரத்தாகிவிடும் என்ற காரணத்தினால் யோசித்துக் கொண்டிருந்த ஷோபனா செட்டில் இருந்த ஒரு டேபிளில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் விரித்து வைத்திருந்தார்களாம். அந்த வெள்ளை நிறக் கவரை உள் பாவாடை ஆக கட்டிக்கொண்டு மேலே சேலை அணிந்து கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.
இதையும் படிங்க : எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த குஷ்பூ!.. வாயடைத்துப் போன இயக்குனர்..
அந்தப் பாடல் காட்சியில் ஒரு சீனில் ரஜினி ஷோபனாவை கட்டி அணைக்கும் விதமாக ஓரு காட்சி படமாக்கும் போது சலசலவென சத்தம் கேட்டதாம். அதைக் கேட்ட ரஜினிக்கு திடீர் ஷாக் ஆகிவிட்டதாம் .உடனே ஷோபனா விவரத்தைச் சொல்ல யாரிடமும் இதை சொல்லாதீர்கள் என்றும் வேண்டுகோளாக வைத்தாராம். ரஜினியும் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லையாம் இந்த நீண்ட நாள் ரகசியத்தை ஒரு பேட்டியின் மூலம் ஷோபனா தெரிவித்தார்.