ஷோபனா வீட்டில் திருட்டு! யாரும் இதுவரை கொடுக்காத தண்டனை! இப்படியும் ஒரு நடிகையா?

by Rohini |
shobana
X

shobana

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சோபனா. முதன் முதலில் மலையாள திரை உலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் ஷோபனா. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஒரு சில ஆங்கில படங்களிலும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

shobana1

shobana1

சிறந்த நடிகை என்பதையும் தாண்டி இவர் ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞரும் ஆவார். தேசிய விருதுகளை வென்றுள்ள சோபனா 1980 மற்றும் 90களில் ஒரு முன்னணி நடிகையாகவே வலம் வந்தார். திரை உலகில் மிக முக்கிய இயக்குனர்களாக கருதப்படும் மணிரத்தினம், பரதன், பாசில், பிரியதர்ஷன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் சோபனா.

தன்னுடைய இருபதாவது வயதிலேயே ஒரு சிறந்த நடிகையாகவும் ஒரு சிறந்த நடன இயக்குனராகவும் மாறினார். சினிமாவில் மட்டுமல்ல பரதநாட்டியத்திலும் பல விருதுகளை வென்றிருக்கிறார் இவர். இந்த அளவுக்கு ஷோபனா பரதநாட்டியத்தில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவருடைய குடும்ப பின்னணி தான்.

இதையும் படிங்க : எனக்காக இதை நீங்கள் செய்வீங்களா?!. எம்.ஜி.ஆரிடம் மனைவி சதானந்தவதி வாங்கிய சத்தியம்!..

திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரின் மருமகள் தான் நடிகை சோபனா. இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ஷோபனா தற்போது பரதநாட்டிய பயிற்சியையும் கொடுத்து வருகிறார்.

shobana2

shobana2

இந்த நிலையில் சோபனாவின் வீட்டில் திருடு நடந்திருப்பதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் விஜயா என்ற பணிப்பெண் ஷோபனாவின் வீட்டில் இருந்த பணத்தை திருடியதாக அவர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம் சோபனா.

இதையும் படிங்க : மனுஷனுக்கு உடம்பெல்லாம் அறிவு! அவர பேட்டி எடுக்கும் போது அஜித் ஆசைப்பட்ட விஷயம் – சந்தானம் கூறிய சீக்ரெட்

அதற்கு அந்தப் பணிப்பெண் வறுமையின் காரணமாகத்தான் பணத்தை எடுத்தேன் எனக் கூறியதும் உடனே சோபனா மனம் மாறி திருடிய அந்தப் பெண்ணை மீண்டும் தன் வீட்டில் வேலைக்கு பணியமறுத்திக் கொண்டாராம். என்ன மனசு சார்? இதுதான் கடவுள் மனசு என்று சொல்லுவார்களோ? என சோபனாவின் இந்த செயலை கண்டு ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர்.

Next Story