Connect with us
saravana store

நடிகை ஸ்ரேயாவுக்கு குழந்தை இருக்கா?… அதிர்ச்சி கொடுத்த வீடியோ….

shreya

Cinema News

நடிகை ஸ்ரேயாவுக்கு குழந்தை இருக்கா?… அதிர்ச்சி கொடுத்த வீடியோ….

தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா. அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். மேலும், ஸ்ரேயா அவ்வப்போது சமூக வலைதங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில சமயம் கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

shreya

இந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு 2020ம் வருடத்தில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். அதன்பின் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், இது வெளியே யாருக்கும் தெரியவில்லை. தற்போது அந்த குழந்தையுடன் இருக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பின்னரே ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்தது எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.

மேலும், 2020 ஊரடங்கில் உலகமே கொந்தளிப்பில் இருந்த போது எங்கள் உலகம் மாறியது. எங்களுக்கு அப்போது அழகிய பெண் குழந்தை பிறந்தது.கடவுளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்’என பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top