3 திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக தனக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் வரவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.
கமலஹாசன் மகள்: உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்கின்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கமலஹாசன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு பிறந்த மூத்த மகள். கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகையாகவும் அறியப்பட்டவர் ஸ்ருதிஹாசன்.
இதையும் படிங்க: Vijay: இதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்துலயே பண்ணிட்டாங்க… விஜய் செஞ்சது பழைய டெக்னிக் தான்..!
பட வாய்ப்பு: தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலமாக மிக பிரபலமானார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சுருதிஹாசனுக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. அதனை தொடர்ந்து 3 என்கின்ற திரைப்படத்தில் தனுசுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்தில் ஜனனி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.
அந்த திரைப்படம் வெளியான போது கிடைத்த வரவேற்பு காட்டிலும் ரீ ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறார்கள். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இருப்பினும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.
தெலுங்கு சினிமா: தமிழ் சினிமாவில் பெரிய அளவு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் ஸ்ருதிஹாசன். அங்கு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதிலும் மூத்த நடிகர்களான பாலையா, சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்து ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகின்றது.
சமீபத்திய பேட்டி: பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானது குறித்து பேசி இருந்தார். ஏழாம் அறிவு தனக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய பேனரில் நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதனை தொடர்ந்து எனக்கு வந்த வாய்ப்பு 3. அந்த திரைப்படத்தில் நடிப்பது எனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்திருந்தது.
இதையும் படிங்க: Nepoleon: கேள்வி கேட்டு நெப்போலியன் மருமகளை அழ வைத்த சுகாசினி?!… எமோஷனலான தனுஷ்!…
பட வாய்ப்பு இல்லை: நான் 10 வருடம் கழித்து இப்போதுதான் நான் நடித்த ஜனனி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு எவ்வளவு பிடித்ததாக இருந்தது என்பதை புரிந்து கொண்டேன். அந்த திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு வருடம் எனக்கு எந்த ஒரு கதையும் கிடைக்கவில்லை. யாரும் எனக்கு கதை சொல்ல முன்வரவில்லை. அப்போது நான் யோசித்தது உண்டு. ஒரு வேளை இந்த திரைப்படத்தில் நடித்த என்னுடைய கதாபாத்திரம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று எண்ணினேன். அதன் பிறகு பூஜை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஹரி சார் எனக்கு வழங்கினார் என்று அந்த பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…