சினிமால எல்லோரும் பண்றாங்க! நான் பண்ணா மட்டும் தப்பா.. – ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!..
கமல்ஹாசனின் மகள் என்றாலும் தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ருதிஹாசன். தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஆனால் முன்பு போல தமிழ் சினிமாவில் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் வருவதில்லை.
தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு தமிழில் நல்ல வெற்றியை அடைந்ததை அடுத்து பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவரிடம் பேட்டி எடுத்தப்போது மிகவும் வயதான நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கிறீர்கள். கிட்டத்தட்ட உங்கள் தந்தை வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள். இது அதிகமாக விமர்சனத்துள்ளாகிறது.
ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்:
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என கேட்கப்பட்டது. அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கும்போது “முதல் விஷயம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் மேலும் அனைத்து சினிமாக்களிலுமே வயதான நடிகர்களுடன், இளைய நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள். இன்னும் பாலிவுட்டில் கூட அப்படி நடிக்கிறார்கள். ஷாருக்கான், சல்மான்கான் போன்ற நடிகர்களுடன் இளைய நடிகைகள் நடிக்கிறார்கள்.
அப்படியிருக்குக்கும்போது நான் மட்டும் ஒரு வயதான நடிகருடன் நடிப்பது எப்படி தப்பாகும் என கேட்டுள்ளார் சுருதிஹாசன். இந்த வருடம் பொங்கலுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவி நடித்து வெளியான வால்ட்டர் வீரய்யா இரண்டு திரைப்படங்களிலுமே ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளத்தை குறைத்த தனுஷ்?… ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!