Actress Shuruti Hasan: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக தெலுங்கு சினிமா அவரை தத்தெடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம். தமிழை விட தெலுங்கில் தான் அவருக்கு மார்க்கெட் அதிகமாகவே இருக்கிறது.
சினிமாவை தவிர்த்து அவருக்கு பர்சனல் ஆக பிடித்தவை இசை, புத்தகங்கள். நடிப்பை விட இந்த இரண்டிற்கும் ஸ்ருதிஹாசன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் கொஞ்ச நாளாக அவரின் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் என அனைத்தையும் பகிர்ந்து அவருடைய காதலை உறுதி செய்திருந்தார்.
இதையும் படிங்க: எம்ஆர்.ராதா துப்பாக்கி வாங்கினதே எம்ஜிஆரை சுட இல்லை… அந்த டார்கட்டே வேறயாம்…! ராதாரவி சொன்ன ரகசியம்
அவருடைய காதலன் பெயர் சாந்தனு ஹஸாரிகா. இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. அடிக்கடி ஆண் நண்பருடன் செல்பி எடுத்துக்கொண்டு அதை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியிலும் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். இவர் அடிப்படையில் ஒரு விஷுவல் ஆர்டிஸ்ட், மும்பையை சேர்ந்தவர்.
சில ஆண்டுகளாக இருவருக்குமே காதல் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக ஸ்ருதிஹாசனை சாந்தனுவுடன் பார்க்க முடியவில்லை. அவருடைய காதல் முற்றுப்பெற்று விட்டது என்றும் பல செய்திகள் இணையத்தில் வெளியாகின. அதை உறுதி செய்யும் வகையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் எல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் புதுமையை நோக்கி பயணப்படுவோம் என்பது மாதிரியான ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார் ஸ்ருதிஹாசன்.
இதையும் படிங்க: ரீல்ஸில் பிரச்னை செய்யும் மதுரை முத்து மனைவி… இரண்டாவது கல்யாணத்திலும் கோளாறா?
அதிலிருந்து இவருக்கும் சாந்தனுவுக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டது என்றே தெரிகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் திடீர் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு ஹோட்டலில் இருந்து ஸ்ருதிஹாசன் வெளியே வருவதும் அவருக்கு பின்னால் இன்னொரு நண்பர் கூடவே வருவதும் மாதிரி அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் உன்னுடைய அடுத்த பாய் பிரண்டா என கேட்டு கண்டபடி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C7oV8BtRLEX/?igsh=bjA4ZTJ0MmJnb25u
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…