“எனக்கு கண்ணு தெரியாதுதான்.. ஆனா?”.. ஓப்பனா சொன்ன சிம்பு பட நடிகை..

by Arun Prasad |   ( Updated:2022-09-27 04:01:12  )
“எனக்கு கண்ணு தெரியாதுதான்.. ஆனா?”.. ஓப்பனா சொன்ன சிம்பு பட நடிகை..
X

சிலம்பரசன் நடிப்பில் கடந்த 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.

இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. எனினும் சிலம்பரசன் இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் எனவும் பாராட்டுகள் வந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மல்லிப்பூ” பாடல் உலகம் முழுவதிலும் வேற லெவல் ரீச் ஆகியுள்ளது. “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சித்தி இத்னானி. இவர் ஹரீஷ் கல்யாண் நடித்த “நூறு கோடி வானவில்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தி இத்னானி குஜராத்தி மொழியில் தான் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது கன்னகுழியால் பலரையும் ஈர்த்து வரும் சித்தி இத்னானி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது தனது உடைமைகளை காட்டிய அவர், தனது மூக்கு கண்ணாடியையும் எடுத்து காட்டினார்.

அப்போது அவர் “ஓப்பனாக சொல்லவேண்டும் என்றால் எனக்கு கண் தெரியாது” என கூறினார். இதனை கேட்டு நிருபர் அதிர்ச்சியடைந்தார். மேலும் பேசிய சித்தி இத்னானி “அதாவது எனக்கு தூரப்பார்வை. கொஞ்சம் தூரத்தில் இருந்தால் கூட எனக்கு சரியாக தெரியாது. ஆதலால்தான் நான் இந்த மூக்கு கண்ணாடியை பயன்படுத்துகிறேன்” என கூறினார்.

இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னக்குழி அழகி என்று ரசிகர்களிடம் பெயர் பெற்ற சித்தி இத்னானி, தனக்கு தூரப்பார்வை இருப்பதாக ஒப்பனாக கூறியது ரசிகர்களை வியப்படையவும் வைத்துள்ளது.

Next Story