பிரபல நடிகையின் கணவரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட சில்க் ஸ்மிதா!.. அந்த நடிகையே கூறிய சுவாரஸ்ய தகவல்..

by Rohini |   ( Updated:2022-12-08 14:49:37  )
silukku
X

silukku

80, 90களில் தன்னுடைய காந்தகவர்ச்சியால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் கட்டி போட்டு வைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரின் நடனத்திற்காகவே பல படங்கள் விற்பனையாகியிருக்கிறது என்றால் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று அறிய முடிகிறது.

silukku

ஆடுவது ஒரு பாடல் தான். ஆனாலும் அவரின் கால்ஷீட்டிற்காக சில்கின் வீட்டு வாசல் படியில் காத்துக் கிடந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஏராளம். இப்படி கவர்ச்சி நடனமே ஆடி வந்த சில்க் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நடித்து அனைவரையும் வாயடைக்க வைத்தார்.

இதையும் படிங்க : விஜய் ரூம் ஃபுல்லா இந்த போஸ்டர் தான் இருக்கும்!.. சிறுவயது லூட்டியை பளிச்சினு கூறிய ஆனந்த்ராஜ்!..

அந்த படத்தில் சில்கிற்கு குணச்சித்திர வேடம் என்று தெரிந்தவுடன் அந்த படக்குழு முழுவதும் தயக்கம் காட்டினார்கள்.கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று பயந்தார்கள். ஆனால் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் சில்க். இப்படி பல வெற்றிப்படிகளை கடந்த சில்க் திடீரென தற்கொலை செய்தது சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

silk2_cine

silk

இந்த நிலையில் நடிகை சுலக்‌ஷனா சில்க் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அதாவது கிண்டலாக சுலக்‌ஷனாவிடம் சில்க் ‘ நான் உன்னுடைய கணவரைத்தான் திருமணம் செய்திருப்பேன். ஆனால் நீ அவரை கல்யாணம் பண்ணிவிட்டாய்’ என்று கூறினாராம். அதற்கு சுலக்‌ஷனாவும் இப்போ கூட பரவாயில்லை. நான் எதுவும் சொல்லமாட்டேன். நீ அவர கூட்டிட்டு போ, நான் ஓரமா ஒரு இடத்துல இருந்திருக்கிறேன் என்று கூறுவாராம்.

silk3_Cine

sulakshana

சுலக்‌ஷனாவின் கணவர் வேறு யாருமில்லை. பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.வி யின் மகன் தான் சுலக்‌ஷனாவின் கணவர். இவரும் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார். சில்க் இறந்ததும் சுலக்‌ஷனா அவரது கணவரிடம் போய் கேட்டாராம். நீங்களே சில்கை கல்யாணம் செய்திருந்தால் ஒரு வேளை உயிருடன் ஆவது இருந்திருப்பார் என்று கூறினாராம்.

Next Story