தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் இவர். இவரது நடனத்திற்கென்றே தனி ரசிகர்கள் உண்டு.

இவரது நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘ரமணா’ நட்புக்காக போன்ற பல மாபெரும் வெற்றிப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார்.

இந்த நிலையில் தற்போது ஸ்டைலான லுக்கில் போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் சிம்ரன் வெளியிட்டுள்ளார். 40+ வயதில் இருக்கும் சிம்ரனின் இந்த போட்டோஸ்களை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அந்த ஸ்டைல் குறையவில்லை என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.







