பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத சஞ்சீவ்.. அவர் கூறிய அக்கா யார் தெரியுமா?...
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர், திரைப்பட நடிகர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் சஞ்சீவ். மெட்டி ஒலி, திருமதி செல்வம் என இவர் நடித்த பல சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் இவர்.
தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக இவர் உள்ளே சென்றார். நேற்றைய நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் தமிழா இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘அன்பறிவு’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. அப்படத்தை இயக்கிய அஸ்வின் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சஞ்சீவ் எனது அக்கா இறந்தபின் அவரின் மகளை நானே வளர்த்து திருமணம் செய்து வைத்தேன். அஸ்வினை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கூறி அழுதார். இதற்கு பின் ஒரு கதை இருக்கிறது.
90களில் பல படங்களில் நடித்த நடிகை சிந்துதான் சஞ்சீவின் அக்கா. இணைந்த கைகள் படத்தில் அருண்பாண்டியனுக்கு ஜோடியாக நடித்திருப்பர். சினிமா வாய்ப்பு குறையவும் மெட்டி ஒலி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவருக்கு ஆஸ்துமா பிரச்சனை உண்டு. 2004ம் ஆண்டு தமிழகத்தை புரட்டிப்போட்ட சுனாமி வந்து கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது சமூக சேவையில் இறங்கி நிதி திரட்டி பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் சிந்து.
அந்த சமயத்தில் அதிகமாக நடந்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 33. அவருக்கு ஸ்ரேயா என்கிற மகள் இருந்தார். சிந்துவின் மறைவுக்கு பின் அவரின் தம்பி சஞ்சீவ் அக்கா மகளை வளர்த்தார். வளர்ந்த பின் ஸ்ரேயா அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த அஸ்வின் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘அன்பறிவு’.
COPYRIGHT 2024
Powered By Blinkcms