அந்த நடிகர்களின் படங்களில் செம கிளாமரா நடித்த நடிகை...திருமணத்திற்குப் பிறகும் வாய்ப்பு கேட்டு கெஞ்சிய திரையுலகம்!

by sankaran v |
அந்த நடிகர்களின் படங்களில் செம கிளாமரா நடித்த நடிகை...திருமணத்திற்குப் பிறகும் வாய்ப்பு கேட்டு கெஞ்சிய திரையுலகம்!
X

Sivaranjani

ரசிகர்களால் செல்லமாக பூனைக்கண் அழகி என்று அழைக்கப்பட்ட நடிகை சிவரஞ்சனி. 90களில் பார்ப்பதற்கு செம கியூட்டாக இருந்தார்.

தமிழில் இவரது படங்களுக்கு தனி மாஸ் எப்போதுமே உண்டு. இவர் திரை உலக வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நவ.15, 1970ல் பிறந்தார். தனது பர்சனல், புரொபஷனல் சம்பந்தமாக எந்த ஒரு நிகழ்வையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதனால தான் சினிமாவே வேணாம்னு வெறுத்து ஒதுக்கினார்.

இவருக்கு சின்ன வயசுல இருந்து நடிக்கணும்னு ஆசையே இல்லை. சின்ன வயசுல சென்னைல தான் இருந்துள்ளார். அப்பா அம்மா எல்லாரும் வேலைக்காக அரபு தேசம் போயிருந்தார். சிவரஞ்சனி சென்னையில அவரோட பாட்டி வீட்டுல வளர்ந்தார்.

அங்குள்ள பள்ளியில் படித்துள்ளார். பி.என்.நாராயணன் என்ற எழுத்தாளர் தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் மூலமாகத் தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதலில் கன்னடத்தில் தான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

OOha

1990ல் கன்னட படத்தில் அறிமுகமானார். அதே நேரம் தமிழில் நவரச நாயகன் கார்த்திக் நடித்த மிஸ்டர் கார்த்திக் படத்தின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு சிவரஞ்சனிக்குக் கிடைத்தது. இந்தப் படத்தை சரத்குமார் தயாரித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களுமே ஹிட்டானதைத் தொடர்ந்து தெலுங்கிலும், மலையாளத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 1992ல் தலைவாசல், தங்க மனசுக்காரன், 1993ல் தாலாட்டு, 1996ல் அவதார புருஷன் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தலைவாசல் படத்தில் உமா மகேஸ்வரி என்ற இயற்பெயரை சிவரஞ்சனி என்று மாற்றிக் கொண்டார். தங்கமனசுக்காரன் படத்தில் முரளியுடன் இணைந்து சூப்பராக நடித்து இருந்தார்.

Thangamanasukkaran

படத்தில் எல்லாப் பாடல்களுமே செம ஹிட். முரளி, சிவரஞ்சனி ஜோடி நல்லா ஒர்க் அவுட் ஆனது. இவரது நடிப்பை விட டிரஸ், அழகு இவை எல்லாம் தான் ரசிகர்களின் ரசனையாக இருந்தது. ரெட்டை ஜடை, தலையில் பூ என இவர் பார்க்க திரையில் ஒரு தேவதை போல வருவார்.

பாவாடை, தாவணியில் செம சூப்பராக இருப்பார். சேலைன்னா மடிப்பு சேலை தான். இவர் எந்த டிரஸ் போட்டாலும் நல்லா மேட்சா கலர் கலரா போட்டு கவர்ந்திழுப்பார்.

Thalattu

தாலாட்டு படத்தில் மடிப்பு சேலை கட்டி என்ற பாடலுக்கு அரவிந்தசாமியுடன் செம டான்ஸ் போடுவார். இவங்க காம்பினேஷன் சூப்பர். 1994ல் தெலுங்கு பட வாய்ப்பு கிடைச்சது. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. திரையுலகில் தன்னை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் பி.என்.நாராயணன் மூலம் தான் கிடைச்சது.

அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும் பேச்சு அடிப்பட்டது. அவரு உடுப்பி ஓட்டல் கூட வைச்சி நடத்தினாராம். தெலுங்கில ஆமே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலமா நந்தி விருதும் வாங்கியிருக்காங்க.

இந்தப் படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த். அவர் தான் இவரோட காதல் கணவர். இவர் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் ரெண்டு...மூணு படங்கள் நடிச்சதுக்கு அப்புறம் தான் காதலிச்சாங்களாம். 1997ல் இவர்களது திருமணம் நடந்தது. தொடர்ந்து படிப்பைத் தொடர முடியாததால் நிறுத்தி விட்டார். தமிழில் இவருக்கு சிவரஞ்சனி. மலையாளத்தில் உமா மகேஸ்வரி. தெலுங்கில் வோகா. அப்படின்னு 3 பெயர்கள் இவருக்கு இருக்கு.

ச்சீயான் விக்ரமும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். வோகா படத்தில் இவரது கேரக்டர் பேரு அதுதான். நல்லா பேமஸ் ஆகவே இவருக்கு அங்க அந்த பேரு கிடைச்சது.

முரளி, பிரசாந்த் படங்களில் கிளாமரா நடிச்சாங்க. கமலுடன் கலைஞன் படத்தில் நடித்தார். பிரபுவுடன் சின்னமாப்ளே, விஜயகாந்துடன் ராஜநடை, பிரசாந்துடன் செந்தமிழ் செல்வன் அப்படின்னு ஏகப்பட்ட ஹிட் படங்கள் வந்தது.

Sivaranjani in Kalaignan

திருமணத்திற்குப் பிறகும் இவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. ஆனாலம் என்னை விட்டுருங்க. நான் நடிக்கவே இல்லைன்னு சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டார்.

இவருக்கு 3 பிள்ளைகள். மூவருக்கும் 5 வருட இடைவெளி. இவரது மகன் ரோஷன் நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்குப் பிறகு மேதா என்ற பொண்ணும், ரோஹன் என்ற மகனும் உள்ளனர்.

Sivaranjani with daughter

இவரது மகள் வேதா பரதநாட்டியம் கற்றுள்ளார். பேஸ்கட் பாலில் தேசிய அளவில் விளையாடி உள்ளார். அனுஷ்கா ஷெட்டியின் ருத்ரமாதேவி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Next Story