அந்த சிரிப்புலதான் விழுந்துட்டோம்!.. சிரிப்பழகி சினேகாவின் க்யூட் கிளிக்ஸ்...
விரும்புகிறேன், ஆனந்தம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சினேகா. அதிலும், ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
குடும்பபாங்கான வேடங்களில் தாவணி பாவாடை மற்றும் புடவை அணிந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அஜித், விஜய், தனுஷ், சிம்பு, விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார்.
குக்குராமத்தில் உள்ள சலூன் கடைகளில் கூட இவரின் புகைப்படம் இருக்கும் அளவுக்கு சினேகா பிரபலமானார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
தற்போது மீண்டும் கதாநாயகி ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை. இவரும் மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களிடம் அவருக்கு மிகவும் பிடித்த க்யூட் சிரிப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.