தளபதியோட எல்லா சீன்லயும்! ‘கோட்’ படத்தை பற்றி சினேகா கொடுத்த அப்டேட்

Published on: June 13, 2024
sneha
---Advertisement---

GOAT Movie: தமிழ் சினிமாவில் விஜய் என்றாலே அது ஒரு பெரிய மாஸ். கோலிவுட்டில் ஒரு வசூல் மன்னனாக கலக்கி வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்கிறது .

படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்கள் .மேலும் இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா,அஜ்மல், மோகன் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான அப்டேட் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: என் ராசாவின் மனசிலே படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!. மிரண்டு போன ராஜ்கிரண்!…

படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் இருந்து சினேகா கொடுத்த ஒரு அப்டேட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீங்கள் நடிக்கிறீர்களா இல்லையா என்ற கேள்விக்கு ஆமாம் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சினேகா கூறினார்.

மேலும் அவரிடம் எந்த மாதிரியான கதாபாத்திரம் என கேட்க அதற்கு சினேகா தளபதியோட இந்த படத்தில் எல்லா சீன்லயும் நான் வருவேன் தாராளமாக பார்க்கலாம் என்ற ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். விஜய் நடிக்கும் படத்தின் ஏதாவது ஒரு சின்ன அப்டேட் வந்தாலும் அதை கொண்டாடும் ரசிகர்களுக்கு சினேகா கொடுத்த இந்த அப்டேட் பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கத்துக்கு வாலா இருக்கிறத விட ஈ-க்கு தலையா இருப்பேன்! பெரிய ஹீரோக்கள் மீது இவருக்கு என்ன கோபம்?

மேலும் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதால் இன்னும் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலும் அவரின் அரசியல் பிரவேசம் விஜய் மீது ஒரு க்யூரியாசிட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.