நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்!. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் சினேகா..
மும்பையில் பிறந்து துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் சினேகாவுடையது. மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்புகள் தேடினார்.
மலையாள படத்தில் அறிமுகமானார். அதன்பின் மாதவன் நடித்த என்னவளே படத்தில் நடித்தார். அப்படியே தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
லிங்குசாமி இயக்கத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ஆனந்தம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் சினேகே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
தெலுங்கிலும் தொடர்ந்து நடித்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். விட்டால் நம்மை அம்மா நடிகையாக மாற்றிவிடுவார்கள் என நினைத்தாரா தெரியவில்லை.
விதவிதமான உடைகளில் அழகை காட்டி இப்பவும் நான் கதாநாயகியா நடிப்பேன் என மறைமுகமாக கூறி வருகிறார். அந்த வகையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.