சினேகாவின் ஸ்டைலிஷ் லுக்கிற்கு குவியும் எக்கசக்க லைக்ஸ்!

2000ம் காலகட்டத்தில் ஹிட் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை சினேகா. புன்னழகை அரசி என ரசிகர்களால் புகழப்பட்ட சினேகா விரும்புகிறேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதையடுத்து என்னவளே, பார்த்தாலே பரவசம் , உன்னை நினைத்து, பம்மல் கே. சம்பந்தம், வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டைஉள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையானார். தமிழ் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னட உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: கீழ எதாவது டிரெஸ் போடும்மா!…தொடையை காட்டி வெறியேத்தும் ஷெரின்..(வீடியோ)..

விஜய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறார்.
இதனிடையே இளமை மாறாமல் இன்னும் அப்படியே இருக்கும் சினேகா தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்துள்ளது.
