ஏழு வருஷமா இந்த கொடுமையை அனுபவிச்சேன்!..கிளாமர் நடிகை ஓப்பன் டாக்!..

by Rohini |
sona_main_cine
X

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது பொதுவாக எல்லா துறைகளிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் சினிமா துறை மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த துறையில் தான் பெண்களை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தாங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

sona1_cine

இது இப்பொழுது மட்டும் இல்லை. காலங்காலமாக தொடர்ந்து வரும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. நிறைய நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற பெயரில் சமூகத்தில் நாமும் ஒரு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கும் உட்படுகின்றனர். இப்படி ஏராளமான நடிகைகள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை நிறைய பேட்டிகளில் சொல்லியிருப்பதை பார்த்திருப்போம்.

இதையும் படிங்கள் : கமல் படத்திற்கு ரஜினி வைத்த டைட்டில்… பொது மேடையில் சஸ்பென்ஸை உடைத்த கே எஸ் ரவிக்குமார்..

sona2_cine

அந்த வகையில் நடிகை சோனாவும் இதை பற்றி பேசியிருக்கிறார். அவர் நடிக்க வரும் பொழுது அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய அழைத்ததாகவும் அப்படி ஒன்றும் அவசியம் இல்லை என்று அந்த படங்களில் அவர் நடிக்க வில்லை என்றும் கூறினார். ஆனால் சோனா ஏழு வருடங்களாக ஒருவரை காதலித்ததாகவும் அந்த நபரும் சோனாவை காதலித்திருக்கிறார். ஆனால் அந்த ஏழு வருடங்கள் சோனாவை உடல் ரீதியாக மட்டும் அந்த நபர் பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் கூறினார்.

sona3_cine

இதையும் படிங்கள் : கோலிவுட்டின் கியூட் ஜானுவா? ஜெஸ்ஸியா? கண்டுப்பிடிக்கலாம் வாங்க…

இதனாலயே சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சோனாவும் அந்த நபரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணம் வரை சென்று ஆனால் அது நடக்காமலயே போயிருக்கிறது. அவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போனதால் கல்யாணம் நடக்கவில்லை என்று கூறினார். ஆனால் நான் நிறைய நேரங்களில் அழும் போதெல்லாம் அந்த நபர் என் அழுகையை அவர் சந்தோஷத்திற்கு பயன்படுத்திக் கொள்வார் என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கிறேன் என்றும் தனியாக சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது என்றும் கூறினார் சோனா.

Next Story