தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தன் நடனம் மூலமே தனி அடையாலத்தை பெற்றவர் இவர். திரையுல்கிற்கு வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டவர் இவர். தெலுங்கு மட்டுமின்றி தமிழில் பராசக்தி மூலம் அறிமுகம் ஆனார். தற்போது தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேசிய ஸ்ரீலீலா கூறியபோது,
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வந்த தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் காயப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தன. ஒரு கட்டத்தில் இந்த ஆன்லைன் ட்ரோலிங்கை பார்த்து எனக்கு பயமே வந்துவிட்டது. இதனால் எனக்குக் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இனிமேல் எதற்கு நடிக்க வேண்டும், பேசாமல் சினிமாவையே விட்டு முற்றிலுமாக விலகிவிடலாம் என்று கூட நான் யோசிக்கும் அளவிற்கு சென்றேன் என மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் கடினமான சமயத்தில், மனநலப் பாதுகாப்பு எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. அதோடு, எனது நெருங்கிய நண்பர்களின் அன்பும், இடைவிடாத ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…