Connect with us
banner

பிரபல சேனல் அதிகாரி என்னை தனி அறைக்கு அழைத்தார்.! நடிக்கையின் அந்த ‘திக்’ நிமிடங்கள்…

Cinema News

பிரபல சேனல் அதிகாரி என்னை தனி அறைக்கு அழைத்தார்.! நடிக்கையின் அந்த ‘திக்’ நிமிடங்கள்…

பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நன்கு அறியப்பட்டவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. இவர் சீரியலில் நடித்து புகழ் பெற்றதை விட அண்மைகாலமாக சர்ச்சை கருத்துக்களை பேசி அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம்.

வலிமை படம் ரிலீசான போது அந்த படம் பற்றி விமர்சனம் செய்து நெட்டிசன்கள் மத்தியில் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அடுத்ததாக சிம்புவை காதலிப்பதாக கூறி, என்னுடன் வந்து விடு சிம்பு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும்,  சிம்புவின் வீட்டு முன் தர்ணா வரை ஈடுபட்டு விட்டார்.

இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தன்னை சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாகவும்,  தன் நண்பர்கள் தன்னை உபயோகப்படுத்தி கொள்வதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது, ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதாவது தான் சீரியல் நடித்திக கொண்டிருந்த சமயம், அந்த சேனல் முக்கிய அதிகாரி ஒருவர் தன்னை அவர் அலுவலகத்துக்கு வர சொன்னார். ஆனால் அந்த அலுவலகத்தில் அப்போது  யாருமே இல்லை. அங்கு நான் மட்டும் தனியாக இருந்தேன். உடனே நான் என்ன செய்வதென்று தெரியாமல், இவர் ‘இதற்காகத்தான்’ நம்மை தனியே வரவழைத்துள்ளார் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

இதையும் படியுங்களேன் – என்னது கைதி ‘ஹீரோ’ விக்ரமில் நடிச்சிருந்தாரா.?! லோகேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!

உடனே, எனது நண்பர் கீழே இருக்கிறார். அவரை நான் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். என்று கூறி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். அந்த சமயம் எனது நண்பர்கள் யாரும் அங்கு இல்லை. இருந்தாலும் சாமர்த்தியமாக யோசித்து பொய் சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டேன். அந்த சேனல் அதிகாரியின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்று தனது திக் திக் அனுபவத்தை சீரியல் நடிகை ஸ்ரீநிதி அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top