தமிழ் சினிமாவில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. 1967 இல் தமிழில் வெளிவந்த திருவருட்செல்வர் திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீவித்யா.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தாலும் 1971ல் வெளிவந்த நூற்றுக்கு நூறு திரைப்படத்தில்தான் இளமையான கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 1975 இல் வெளிவந்த அபூர்வ ராகங்கள் திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமும் கிடைத்தது அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு,மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா.
ரஜினி கமலில் துவங்கி அப்போதே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த முக்கியமான நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா. நடிகை சாவித்திரியை போலவே ஸ்ரீபிரியாவுக்கும் அவரது கடைசி காலம் கொஞ்சம் கொடுமையானதாகவே அமைந்தது.
எந்த ஒரு நடிகர் நடிகையரிடம் பேசுவதாக இருந்தாலும் ஸ்ரீ வித்யா மிகவும் நேரடியாக பேசக்கூடியவராக இருந்தார். மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே கேட்டுவிடுவார். இந்த காரணத்தினாலே இடையில் சில நாட்கள் அவர் வாய்ப்புகளை இழந்தார்.
கோபமான ஸ்ரீவித்யா:
அப்படி சினிமாவில் அவர் வாய்ப்பு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் அவரை பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு முறை அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது செய்யாறு பாலுவை கண்ட ஸ்ரீவித்யா எனக்கு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் எதற்காக என்னை பேட்டி எடுக்க வந்துள்ளீர்கள்.
இந்த பேட்டி அவ்வளவு பிரபலமாக போகாதே என்று கேட்டுள்ளார். மேலும் 13 வயதிலேயே தப்பான தொழில் செய்தேன் என்று நான் சினிமாவிற்கு வந்ததையே தப்பாக எழுதினீர்களே அந்த பத்திரிகைதானே நீங்கள் என்று நேரடியாகவே செய்யாறு பாலுவை கேட்டுள்ளார் ஸ்ரீவித்யா.
அதனை அடுத்து அவருக்கு சமாதானம் சொன்ன செய்யார் பாலு இப்பொழுது அதே பத்திரிக்கையில் உங்களைப் பற்றி நல்ல கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன் என்று கூறி அந்த கட்டுரையை எழுதியுள்ளார். இதை ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பாலுமகேந்திரா இயக்குனர் ஆன சுவாரஸ்ய பின்னனி – இதுதான் காரணமா?
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…