பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளியான கேஜிஎப் மற்றும் கேஜிஎப்-2 இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதிலும், கேஜிஎப்-2 திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்திலும் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியது.
இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. முதல் பாகத்தில் யாஷ் அவரை ஒரு தலையாக விரும்பதுவது போலவும், 2ம் பாகத்தில் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று வீட்டில் வைத்திருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அதன்பின் மனம் மாறி அவர் யாஷை கணவராக ஏற்றுக்கொள்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் இவர் அடக்க ஒடுக்கமான உடைகளை அணிந்து நடித்திருப்பார்.
இந்நிலையில், இவர் அழகிப்போட்டிகளில் பிகினி உடைகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.