தமிழ் உச்சரிப்பு சரியாக பேசக்கூடிய நடிகை!.. கலைஞரே பாராட்டிய அந்த நடிகை யார் தெரியுமா?..
சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. இவரின் தமிழ் கேட்பவர்களை மெய்மறக்க செய்யும். தமிழும் தமிழ் உச்சரிப்பும் இதுவரை அந்த அளவுக்கு யாரும் இருந்ததில்லை என்றே கூறலாம்.
இவரை பின்பற்றியே தமிழில் ஈடுபாடு கொண்டு வந்தவர் ஏராளம். பிரபலங்கள் முதல் எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், வசனகர்த்தா, என யாரை கேட்டாலும் எங்களுக்கு முன்னுதாரணமே கலைஞர்தான் என்று சொல்வதுண்டு.
தமிழை தன் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர் கலைஞர். இவரின் வசனத்தில் எத்தனை எத்தனை படங்கள் சினிமாவில் கொடிகட்டி பறந்திருக்கின்றன. பூம்புகார் படத்தில் கண்ணகி பொங்கி எழும் போது அனல் பறிக்கும் வசனம், பராசக்தியில் செய்யாத குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கும் சிவாஜியின் ஆக்ரோஷமான வசனம் என பல படங்களில் கலைஞரின் தமிழ் புகுந்து விளையாடியிருக்கின்றன.
இந்த நிலையில் கலைஞரே ஒரு சமயம் ‘ சினிமாவில் நான் பார்த்து வியந்து தமிழை அழகாக உச்சரிக்கக் கூடிய 5 நபர்கள்’ என்று சில பேரை குறிப்பிட்டிருக்கிறார். அவர்களில் ஒருவர் நடிகை ஸ்ரீபிரியா. இதை பல பேட்டிகளில் ஸ்ரீபிரியாவே பல முறை சொல்லியிருக்கிறார்.
80களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் தான் ஸ்ரீபிரியா. ஆனால் ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடிக்க வரும் போது தமிழ் அவ்ளோவாக தெரியாதாம். போக போகத்தான் கற்றுக் கொண்டாராம். ஸ்ரீதேவிக்கு பிறகு ஸ்ரீபிரியாவின் ஆதிக்கம் தான் 80களில் அதிகமாக இருந்தது.
இதையும் படிங்க :சிம்புவுக்கு இப்படி ஒரு தண்டனையா?.. உன்னை நம்பித்தானே அனுப்புனேன்?.. தயாரிப்பாளரை மூக்குடைத்த உஷா..
இவரின் தமிழ் உச்சரிப்பு தான் கலைஞரை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஒரு சமயம் ஏதோ ஒரு சினிமா மேடையில் கலைஞர் ஸ்ரீபிரியாவின் உச்சரிப்பும் அற்புதம் என சொல்லியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு சொன்ன ஸ்ரீபிரியா ‘ நான் என் கெரியரில் விருதுகள் பல வாங்கியது இல்லை, ஆனால் கலைஞர் சொன்ன அந்த ஒரு வார்த்தையே எனக்கு ஏராளமான விருதுகளை பெற்றுக் கொடுத்ததற்கு சமம்’ என்று கூறியிருந்தார்.