கிசுகிசுவை உண்மையாக்கிய ஸ்ரீவித்யா!..யாரையும் பாக்க அனுமதிக்காதவர் கமலை மட்டும் அழைத்ததன் பின்னனி!..
தமிழ் தாய்மார்களில் நெஞ்சங்களை கவர்ந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை என்றாலும் முதலில் அறிமுகமான படம் மலையாளத்தில் தான். இவர் அதிகமாக நடித்த படங்களும் மலையாளம் தான்.
இதனாலேயே மலையாள திரையுலகினர் இவரை இன்றளவும் போற்றி வருகின்றனர். ஏகப்பட்ட ரசிகர்கள் மலையாளத்தில் ஸ்ரீவித்யாவிற்காக இருக்கின்றனர்.
அறிமுகம்
இவர் தமிழில் அறிமுகமான ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ திரைப்படம். மேலும் முதலிலேயே எம்ஜிஆருக்கு ஜோடியாக ரகசிய போலீஸ் படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதால் வேண்டாம் என கூறிவிட அவருக்கு பதிலாக நடித்தவர் தான் வெண்ணிறாடை நிர்மலா.
ஆனால் குழந்தை நட்சத்திரமாக திருவருட்செல்வர் படத்தில் நடித்திருப்பார். இவரது தாயார் ஒரு பாடகி என்பதால் ஸ்ரீவித்யாவும் நன்றாக பாடக்கூடியவர். ஒரு சில பாடல்களை பாடவும் செய்திருக்கிறார். எதார்த்தனமான நடிப்பால் மக்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
ஒரு தலைகாதல்
கமல், ரஜினி ஆகிய இருவருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். ஜோடியாகவும் அம்மாகவும் நடித்திருக்கிறார். ஸ்ரீவித்யா கமலை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கமல் மீது அலாதி அன்பு கொண்டவாராகவும் இருந்தாராம்.
ஆனால் அந்த நேரத்தில் கமல் வாணி கணபதியை சீரியஸாக காதலித்து வந்தது தெரிந்ததும் ஸ்ரீவித்யாவிற்கு மன உளைச்சலை தந்திருக்கிறது. உடனே அதை மறக்க முடியாமல் மிகவும் தவித்து வந்தார் என்ற செய்திகளும் வைரலானது. இதனாலேயே அவசர அவசரமாக மலையாள இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை
மலையாள சினிமாவில் உதவி இயக்குனராக இருந்த ஜார்ஸ் தாமஸ் என்பவரை காதலித்து அனைவரின் எதிர்ப்பிற்கு பின்னாடி திருமணம் செய்தார் ஸ்ரீவித்யா. ஆனால் கொஞ்ச நாள்களுக்கு பிறகு தான் தெரிந்தது நாம் எடுத்தது தவறான முடிவு என்று . ஏனெனில் ஜார்ஸ் ஸ்ரீவித்யாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டார் என்ற விஷயம் அவருக்கு தெரிய வர இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
இதையும் படிங்க : “உன்னைய நம்பித்தானே இறங்கினேன்.. இப்படி கவுத்திவிட்டுட்டியே”… கடவுளிடம் சண்டை போட்ட ரஜினிகாந்த்… என்னவா இருக்கும்??
விவாகரத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ரீவித்யா.
கேன்சர் பாதிப்பு கமல் சந்திப்பு
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஸ்ரீவித்யா புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் வந்ததில் இருந்து அவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. தோல் சுருங்கி தலைமுடியெல்லாம் உதிர்ந்து மிகவும் பாவமாக காணப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் யாரையும் பார்க்க அனுமதிக்காத ஸ்ரீவித்யா கமலை மட்டும் அனுமதித்திருக்கிறார்.
இதையும் படிங்க : கொடிகட்டி பறந்த பாடகி எல்.ஆர். ஈஸ்வரி!..குரல் சரியில்லைனு விரட்டிய ஒலிப்பதிவாளர்!..பயந்து என்ன செய்தார் தெரியுமா?..
காரணம் அந்த நேரத்தில் கமல் மீது கொண்ட காதல் என்று அன்றைய சந்திப்பில் உறுதிப்படுத்தன பத்திரிக்கையாளர்.கமல் உள்ளே சந்தித்து ஸ்ரீவித்யாவை பார்த்த கோலத்தை பத்திரிக்கையாளரிடம் விவரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீவித்யா தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இல்லாதவர்களுக்கும் அனாதை இல்லங்களுக்கும் எழுதி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.