More
Read more!
Categories: Cinema News latest news

பாடகினு தெரியும்.. இந்த ஐட்டம் சாங்க பாடுனது இவங்களா? ஸ்ரீவித்யா பாடி ஹிட் அடித்த அந்த பாடல்

Actress Srividhya: சில முகங்களை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பார்க்க பார்க்க நம்முள் ஏதோ ஒரு புத்துணர்வை அடைந்ததை போல் ஒரு உணர்வு இருக்கும். அப்படிப்பட்ட முக அமைப்பை கொண்டவர் நடிகை ஸ்ரீவித்யா. கண்களாலேயே மாயங்களை செய்துவிட கூடிய ஒரு அழகுப் பதுமை ஸ்ரீவித்யா.

இவ்வளவு அழகு இருந்தும் அவர் ஹீரோயினாக ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் வருத்தம். அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் குணச்சித்திர வேடமேற்றே நடித்தார். அதுவும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவே நடித்து புகழ்பெற்றவர்,

இதையும் படிங்க: சிம்புவின் பைக் பெஸ்டி யார் தெரியுமா? படம் பார்க்க போன இடத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்

ரஜினி, கமலில் ஆரம்பித்து விஜய் , அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் அம்மாவாகவே நடித்தார் ஸ்ரீவித்யா. ஹீரோயின் வேடம் கிடைக்காவிட்டாலும் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து கொடுத்தார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சிறப்புமிக்க நடிகையாகவே காணப்பட்டார் ஸ்ரீவித்யா.

அவருக்கு சிறப்பம்சமே அவருடைய கண்கள்தான். இதயம் சொல்ல தயங்குவதை அவர் கண்கள் அழகாக காட்டிவிடும். இதை படத்திலும் சிறப்பாக பயன்படுத்தினார். உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒருசில காட்சிகளில் கண்களைக் கொண்டே அந்த காட்சியை வெற்றியடைய செய்து விடுவார் ஸ்ரீவித்யா.

இதையும் படிங்க: பாட்டு எழுத 20 பைசாவை கொடுத்த தயாரிப்பாளர்!.. கண்ணதாசன் வாழ்வில் நடந்த செம காமெடி!..

இவர் சிறுவயதில் இருந்தே இசையை முறையாக கற்றவர். ஸ்ரீவித்யாவின் அம்மா ஒரு சிறந்த கர்நாட்டிக் பாடகி. அதனால் அம்மாவின் வழக்கம் ஸ்ரீவித்யாவிற்கும் தொற்றிக் கொண்டது. ஸ்ரீவித்யாவும் அழகாக பாடக் கூடியவர். 16 வயதிலேயே ஸ்ரீவித்யா இசையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இவரின் குரலில் அமைந்த ஒரு பாடல் பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். இந்தப் பாடலை கேட்ட பிறகுதான் இது ஸ்ரீவித்யா பாடிய பாடலா என்ற ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. கார்த்திக் நடித்த ‘அமரன்’ திரைப்படத்தில் வரும் ரிங் ரிங் என்று தொடங்கும் ஒரு ஐட்டம் பாடலை ஸ்ரீவித்யாதான் பாடினாராம். அந்தப் பாடலில் டிஸ்கோ சாந்திதான் ஆடியிருப்பார். அதுமட்டுமில்லாமல் அந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.

இதையும் படிங்க: தனுஷ் நடிக்கும் படத்தில் கமல், ரஜினி, சிம்பு? இதெல்லாம் வெறும் கனவா இல்லை நனவா?..

Published by
Rohini

Recent Posts