More
Categories: Cinema History Cinema News latest news

கேரியரைப் பற்றிக் கவலைப்படாமல் 23 வயதிலேயே அப்படி நடித்த ஸ்ரீவித்யா… இதுக்கெல்லாம் ரொம்ப துணிச்சல் வேணும்…!

Actress Srividya: தமிழ்த்திரை உலகில் சில நடிகைகள் தான் எல்லா பாத்திரங்களுக்கும் பொருத்தமாக நடிக்க முடியும். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யாவின் நடிப்பைப் பார்க்கும்போது எந்தக் கதாபாத்திரமானாலும் சரி. அதை சிறப்பாக செய்து முடித்துவிடுவார்.

பாசக்கார தங்கையாகவும், அழகான காதலியாகவும், சிறந்த மனைவியாகவும், அன்பு தாயாகவும், இனிமையாகப் பழகும் அண்ணியாகவும், உயிரையேக் கொடுக்கும் தோழியாகவும், அனுபவம் வாய்ந்த பாட்டியாகவும் இவர் நடித்த படங்கள் எல்லாமே இவருடைய நடிப்பை நமக்கு ரசிக்க வைக்கும். ஒரு பெண்ணின் அனைத்து பரிமாணங்களையும் கனகச்சிதமாக வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த நடிகை இவர் தான். இவர் நடிக்கும் போது இவரது கண்கள் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளைப் பேசி விடும். நம் மனங்களில் இவர் ஆழப்பதிய காரணமே இதுதான்.

Advertising
Advertising

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், டி.ராஜேந்தர், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். நடிப்பு மட்டுமல்லாமல் நாட்டியம், இசை ஆகியவற்றிலும் தனது திறமைகளை நிலைநாட்டியுள்ளார். இப்படிப்பட்டவர்கள் திரையுலகில் வெகுசிலர் தான் உள்ளனர். அவர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் ஸ்ரீவித்யா என்றால் மிகையில்லை.

Apoorva ragangal

தனது 23வது வயதிலேயே அம்மா வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அதுவும் சின்னக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவில்லை. வயதுக்கு வந்த மகளாக வரும் ஜெயசுதாவிற்கு அம்மாவாக நடித்து இருந்தார். இப்படி நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும். இது எந்தப் படத்தில் தெரியுமா? பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். இந்தப் படத்தில் தான் ரஜினிகாந்த் அறிமுகமானார்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே இவர் அதீத ஆன்மிக ஈடுபாடு உடையவராம். அதுதான் அவரை ஒரு நல்ல நிலையில் வளரச் செய்தது. யாரும் செய்யத் துணியாத பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நடித்து அசத்தியவர் ஸ்ரீவித்யா. தளபதி, காதலுக்கு மரியாதை, புன்னகை மன்னன் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு இவர் மேல் ஒரு மரியாதையைக் கொண்டு வந்து சேர்க்கும் விதத்தில் அமைந்து இருக்கும். அவ்வளவு பக்குவமான நடிப்பையும் அதே நேரத்தில் யதார்த்தத்தையும் வெளிப்படுத்தி இருப்பார்.

இவரது சாந்தமான முகத்தைப் பார்த்தால் இவருக்கு வணக்கம் போடாதவர்களும் கூட கையெடுத்து வணங்கி விட்டுத்தான் செல்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1967ல் சிவாஜி நடித்த திருவருட்செல்வர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கு நூறு, சொல்லத்தான் நினைக்கிறேன், வெள்ளி விழா, அபூர்வ ராகங்கள் உள்பட இவர் நடித்த படங்கள் பலவும் ரசிக்கத்தக்கவை. 1977ல் கலைமாமணி விருது வாங்கியுள்ளார்.

Published by
sankaran v

Recent Posts