கழுத்தில் சிலுவையுடன் சுற்றும் கமல் பொண்ணு!.. போட்டோ எல்லாம் படு பயங்கரமா இருக்கே பாஸ்!..
Sruthi haasan: சிறுவயது முதலே வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர் ஸ்ருதிஹாசன். முறைப்படி அதை கற்றும்கொண்டார். வெளிநாடுகளுக்கு சென்றும் அந்த இசையை பற்றி படித்தார். மேடைப்பாடகியாக மாறி வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது.
ஆனால், திரையுலகம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது. ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தனுஷுடன் 3 எனும் படத்தில் நடித்தார். இந்த படத்தை ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். அதன்பின் மற்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார் ஸ்ருதி.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று திறமை காட்டினார். அங்கு ஸ்ருதி நடிக்கும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் ஹைதராபாத்தில் ரூம் எடுத்து தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். விஜயுடன் புலி, சூர்யாவுடன் சிங்கம் 3, விஷாலுடன் பூஜை ஆகிய படங்களில் நடித்தார்.
தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற சீனியர் நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தற்போது காதலருடன் மும்பையில் லிவ்விங் டூ கெதரில் வசிக்கும் ஸ்ருதி பாலிவுட்டில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.
ஒருபக்கம், தாறுமாறான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார். அந்த வகையில் கழுத்தில் சிலுவை அணிந்து போஸ் கொடுத்து ஸ்ருதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.