சுண்டி இழுக்கும் சுகன்யாவுக்கா இந்த நிலைமை? மீண்டும் வருவாரா என எதிர்பார்த்து காத்து இருக்கும் ரசிகர்கள்
தமிழ்சினிமாவில் நடிகர், நடிகைகளில் சிலர் ஒரு குறிப்பிட்ட படங்களுக்கு அப்புறம் காணாமல் போயிடுவாங்க. அதுல ஒருவர் தான் நடிகை சுகன்யா. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மியூசிக்கல் கம்போசர். கிளாசிக்கல் டேன்சர். தமிழ்சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார். 1993லருந்து 1997 வரை தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். மியூசிக் ஆல்பமும் பண்ணியிருக்காங்க.
நடிகர் விஜயகாந்துடன் இணைந்து சின்னக்கவுண்டர், சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல் என பல பிளாக் பஸ்டர் படங்களைத் தந்தவர். கொஞ்ச காலமாக இவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. சன்டிவியில் ஆனந்தம் என்ற தொடரில் நடித்தார். சூப்பர் குடும்பம் என்ற ஷோவில் ஜட்ஜாக பங்கேற்றார்.
சுகன்யா தமிழ், தெலுங்கு, மலையாளம்னு பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாடுவது, கம்போஸ் பண்றது என பல திறமைகளையும் அவருக்குள் இருந்து அவரது அப்பா தான் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி. சுகன்யா என்றால் நல்ல பொண்ணு என்று அர்த்தம். இவர் 1969ல் சென்னையில் ஜூலை 9ல் பிறந்தார். அப்பா ரமேஷ். அம்மா பாரதி. கீதான்னு இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. இவரோட அப்பா நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்காரு. கிட்டத்தட்ட 40 ஆன்மிகப் பாடல்களை எழுதியுள்ளார்.
அதனால தான் சின்ன வயசில இருந்தே டான்ஸ் மேல அவ்ளோ ஆர்வம் இருந்ததாம். கலாசேத்ராவில் இவர் நாட்டியம் ஆடியிருக்கிறார். நாட்டிய அரங்கேற்றம் முடிந்ததும் நிறைய படவாய்ப்புகள் வந்துள்ளன. பாரதிராஜா பட வாய்ப்பு வருகையில் முதலில் நோ சொல்லியிருக்கிறார். திரும்பவும் அவர் வந்து இவரை நடிக்கச் சொன்னார்.
அந்தப்படம் தான் புது நெல்லு புது நாத்து. இந்தப்படத்தில் இவருக்கு கலைமாமணி விருது, தமிழக அரசின் விருது ஆகியவை கிடைத்துள்ளது. இதன்பிறகு பல மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்னக்கவுண்டர், மகாநதி, செந்தமிழ்ப்பாட்டு, சின்னஜமீன், திருமதி பழனிசாமி, உடன்பிறப்பு, கேப்டன், டூயமட ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்தியன் படத்தில் இவரது நடிப்பு அபாரம். இந்தியன் படத்தில் கமலுக்கு இணையாக மேக் அப் போட்டு வயதான பாட்டி கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். தெலுங்கில் டப்பிங் வாய்ப்பு தமிழை விட கொஞ்சம் எளிமையாக இருந்தது. மம்முட்டி, மோகன்லால் உடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தும் இவர் நோ சொல்லிவிட்டாராம். அப்போது தமிழில் படுபிசியாக இருந்ததுதான் காரணம்.
2002ல ஸ்ரீதரன் ராஜசேகரன் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் அமெரிக்காவில் நடந்தது. அதன்பிறகும் படவாய்ப்புகள் வரவே இவர் நோ சொல்லியிருக்கிறார். இருவருக்கும் இடையில் இதுவே சந்தேகத்தீயை உண்டாக்கி விவாகரத்துக்கும் காரணமானது. மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டார்.
சோலையம்மா படத்தில் நடித்து வெற்றி பெற்றார். சின்னத்திரையில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருந்தார். மார்கழி மாதத்தில் கீர்த்தனைகள் பாடினார். பெசன்ட் நகரில் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார். இவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்பதையே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.