“எனக்கு டைவர்ஸ் ஆக காரணமே இதுதான்”.. போட்டுடைத்த நடிகை சுகன்யா!

Published on: May 16, 2023
suganya
---Advertisement---

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா நாயர்.


பரதநாட்டிய கலைஞரான இவர், 1991ம் ஆண்டு வெளியான “புது நெல்லு புது நாத்து” படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நடிகை சுகன்யா, கேப்டன் விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார்.

நடிகை சுகன்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கமலுடன் மகாநதி & இந்தியன், விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர், சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகாபிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து பல ரசிகர்களை சுகன்யா கவர்ந்தார்.

டப்பிங் கலைஞராக மணிரத்னம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் நந்திதா தாஸ்க்கு பின்னணி குரல் கொடுத்தவர் தான் நடிகை சுகன்யா. சின்னத்திரை தொடர்களிலும் சுகன்யா நடித்துள்ளார். சன்டிவி சேனலில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ஆனந்தம் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 suganya
suganya

இசையமைப்பாளராகவும் நடிகை சுகன்யா, ஒரு சில ஆல்பம் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை நடிகை சுகன்யா திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அடுத்த ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா, தனது கணவரை விவாகரத்து செய்து கொண்டார். இது தொடர்பாக பேசிய சுகன்யா, “பெண்கள் பயந்து ஓட தேவையில்லை. கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி விவாகரத்து செய்யலாம். அல்லது நீதிமன்றம் சென்றும் விவாகரத்து பெறலாம். விவாகரத்து பெற தயக்கம் இருந்தால் கொடுமையான காலங்களை குடும்ப வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம். அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும்.” என சுகன்யா நாயர் பேசினார்.

muthu

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.