Categories: Cinema History Cinema News latest news

கண்களால் பேசி கதிகலங்க வைக்கும் நடிகை… இந்தப் பாஷைல பேசுறதுன்னா இவருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி…!

தமிழ்ப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகள் பொதுவாக தன்னை ஒரு நடிகையாகவே பார்க்க மாட்டார்கள். அந்தக் கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள். ஏன்னா அவங்களுக்குத் தான் நடிக்க ரொம்ப ஸ்கோப் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் சுஜாதா சிவக்குமார்.

வசனங்களில் ஏற்றம், இறக்கம் காட்டுவதை அப்படியே முகபாவனைகளிலும் காட்டி விடுவார். குறிப்பாகக் கண்களால் இவர் பேசும் வார்த்தைகளும், வாயால் பேசுவதும் அப்படியே ஒத்துப் போகும். சில காட்சிகளில் இவர் பேசும் வசனங்கள் நம்மையே கதிகலங்க வைத்துவிடும்.

சுஜாதா சிவக்குமார் படங்களில் வந்து கோபத்தில் பேசும் டயலாக்கைப் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் இவர் பக்கம் உள்ள நியாயமும், அதே சமயம் இவர் வில்லியாக நடிக்கும் போது இவர் மேல் கோபமும் வந்துவிடும். அந்த வகையில் இவர் இயக்குனர் அமீரின் பருத்திவீரன் படத்தில் நடித்ததை யாராலும் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க: புருஷனை வெறுப்பேற்ற கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிரபல நடிகை!.. எல்லாம் அந்த படம் பண்ண வேலை தானாம்!..

படத்தில் முத்தழகாக வரும் பிரியாமணியின் அம்மா கேரக்டரில் வந்து வெளுத்து வாங்குவார். இவருக்கு கிராமிய மணம் கமழ பேசுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. இவர் மதுரையில் தான் பிறந்து வளர்ந்தவர்.

உலகநாயகன் கமல் உடன் விருமாண்டியில் பசுபதியின் மனைவியாக வருவார். மதுரை வட்டார பாஷையில் பேசி சக்கை போடு போடுவார். இந்த ரெண்டு படங்களுமே இவருக்கு திரையுலகில் பெரிய அளவிலான பெயரை பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன.

பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பிரிவோம் சந்திப்போம், தோட்டா, குருவி, சுறா, களவாணி, ஏழாம் அறிவு, சுந்தரபாண்டியன், வீரம், ரம்மி, காக்கி சட்டை, கோலி சோடா, போக்கிரி ராஜா, விஸ்வாசம், காப்பான், ஜெய் பீம் என பல படங்கள் வந்தன. எல்லாவற்றிலும் தனக்கே உரிய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி குறிப்பாகத் தாய்மார்களைப் பெரிதும் கவர்ந்தார். மகாநதி என்ற விஜய் டிவி தொடரிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்!.. கண்டுக்கொள்ளாமல் ஷூட்டிங் போகும் பெரிய நடிகர்கள்.. ஹரிஷ் கல்யாண் பளிச்!

Published by
sankaran v