டாக்டர் படம் பார்த்து அழுது கண்ணீர் வீட்ட நடிகை...வீடியோ பாருங்க....
கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, இளவரசு, மிளிந்த் சோமன், வினய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் டாக்டர். பல மாதங்களுக்கு பின் இப்படம் தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்றது.
இப்படம் ஒரு டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியிருந்தது. எனவே, இப்படத்தின் பல காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. குறிப்பாக மெட்ரோ ரயில் காட்சியில் சிரிக்காதவார்களே இருக்க முடியாது. அந்த காட்சியில் வயிறு குலுங்க சிரித்து பலருக்கும் கண்ணில் நீர் வந்தது.
இந்நிலையில், நடிகை சுஜா வருணி டாக்டர் படத்தின் மெட்ரோ ரயில் காட்சியை பார்த்து சிரித்து அழுத வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘எவ்வளவு முயன்றும் என் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்ணிர் வர சிரித்தது என் வாழ்வில் இதுதான் முதன்முறை.
டாக்டர் திரைப்படம் இதுபோன்ற விஷயங்களை செய்ய முடியும் என நிரூபித்துள்ளது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், பயமுறுத்தும், கோபப்படுத்தும் மேலும் தூங்கவும் வைக்கும். இப்படம் ஒரு சிரிப்பு மருந்து சிகிச்சை ஆகும். இப்படி ஒரு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கும், நெல்சன் திலிப்குமாருக்கும் நன்றிகள்’என பதிவிட்டுள்ளார்.