காஸிப்ஸுக்கு அஞ்சிர ஆளு நான் இல்ல!.. 19 வருடம் போராடி நீதிமன்றத்தில் ஜெயித்த நடிகை..

by Rohini |
sukanya-actress
X

sukanya

சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் ஏதோ ஒரு கனவோடு தான் நடிக்க வருகிறார்கள். சூழ்நிலை காரணமாகவோ அல்லது வறுமையின் காரணமாகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எப்படியோ வந்து விடுகிறார்கள்.

அவர்களின் அதிர்ஷ்டம் சில பேர் உச்சத்தை தொட்டு விடுகின்றனர். சில பேர் தொடும் வரை போராடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி தங்கள் இலக்கை அடையும் வரை போராடும் பிரபலங்கள் மத்தியில் சில இடைஞ்சலான பல காரியங்களும் வந்து கொண்டும் இருக்கும்.

sukanya1

sukanya1

அவற்றிள் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுவதே கிசுகிசுக்கள் தான். சில பேர் அதை கண்டு கொள்வதில்லை. சில பிரபலங்கள் அவற்றை ஒரு பெரிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு மனதளவில் நொந்தும் விடுகின்றனர். அந்த வகையில் நடிகை சுகன்யா 1991ஆம் ஆண்டு சினிமாவிற்குள் முதன் முதலாக புது நெல்லு புத நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையும் படிங்க : சிவாஜி கணேசனை காப்பி அடிக்காத ஒரே நடிகன் இவன்தான்… பாலச்சந்தர் யாரை சொன்னார்ன்னு தெரியுமா??

அறிமுகமான சில நாள்களிலேயே ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார். வரிசையாக பல படங்கள்,தீபாவளிக்கு மூன்று படங்கள், பொங்கலுக்கு இரண்டு படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது ஒரு பிரபல பத்திரிக்கையில் அவரைப் பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

Sukanya2

Sukanya2

அதைப் பார்த்ததும் ஷாக் ஆன சுகன்யா அவரின் பெற்றோரிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அவர் பெற்றொரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே, பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுரை கூற அந்த கிசுகிசுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸும் சுகன்யா தரப்பில் போட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு சுகன்யாவிற்கு ஆதரவாக அந்த கேஸ் முடிக்கப்பட்டதாம். மேலும் வக்கீல் நோட்டீஸ் போட்ட பிறகு சுகன்யாவை பற்றி எந்த பத்திரிக்கையிலும் கிசுகிசு வரவே இல்லையாம். இதை ஒரு பேட்டியில் சுகன்யா தெரிவித்த பிறகு எதை பற்றியும் கவலைகொள்ளாமல் மனம் தளராமல் நம் வேலையை சரியாக செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story