இந்தியன் படத்தில் நான் பட்ட கஷ்டம்!.. கொஞ்சமும் எதிர்பார்க்கல.. உண்மையை பகிரங்கமாக கூறிய சுகன்யா...
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக பாடலாசிரியராக மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக பிரபல நடிகையாக என பன்முக திறமைகளை ஒருங்கே வாய்க்க பெற்றவர் நடிகை சுகன்யா. 1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலாக அறிமுகமானார் சுகன்யா. இவரை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாரதிராஜாவையே சேரும்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் சுகன்யா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் கிட்டத்தட்ட100 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளான கமல், விஜயகாந்த் மற்றும் மலையாளத்தில் மோகன்லால் , மம்மூட்டி போன்ற நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த பெருமை சுகன்யாவை சேரும்.
இவரின் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை குவித்தது என அனைவரும் அறிந்த ஒன்று. அந்த படத்தில் அப்பா கமலுக்கு ஜோடியாக வருவார் சுகன்யா. அந்த படத்தில் நடிக்கும் போது சில கசப்பான சம்பவங்களை அனுபவித்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுகன்யா தெரிவித்தார்.
இதையும் படிங்க : உங்களுக்கு சரியான ஆளு இவங்கேதான்.. விஜய் பண்ண தவறை சுட்டிக் காட்டிய ஃபேட்மேன் ரவி..
அந்த படத்தில் ஒரு சீனில் வெள்ளையர்கள் சுகன்யாவின் ஆடைகளை உருவி விட மரத்தின் பின்னாடியில் நின்று கொண்டிருப்பார் சுகன்யா. அப்போது கமல் யாரென்று கேட்க அதன் பிறகு தன் ஆடையை கழட்டிக் கொடுப்பார் கமல். இந்த சீன் எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக கேட்டாராம் சுகன்யா எப்படி இந்த காட்சியை எடுக்கப் போகிறீர்கள் என்று . மேலும் சூட்டிங் சமயத்திலும் ஒரு தடவைக்கு இரு தடவை கேட்டுவிட்டு தான் சென்றாராம். அப்போது மரத்தின் பின்னாடி நின்று வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொன்னார்களாம்.
ஆனால் சொன்னது வேறு எடுக்கப்பட்ட காட்சிகள் வேறு. எனக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. சரி நம்மால் படப்பிடிப்பு தடங்கல் ஏற்படக்கூடாது என்று நடித்துக் கொடுத்துவிட்டு என் அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவர் மூலம் சென்சார் போர்டுக்கு என் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தேன்.மேலும் இந்தியன் பட தயாரிப்பாளரிடமும் இந்த காட்சி திரையில் காண்பிக்கப் படமாட்டாது என்று கூறி அவரிடம் கையெழுத்து வாங்கி அந்தக் கடிதத்தையும் டில்லி போர்டுக்கு கொண்டு போய் கொடுத்தோம்.
நல்ல வேளை சென்சார்டு போர்டு தக்க சமயத்தில் என்னை காப்பாற்றியது. கொஞ்சம் நேரம் தவறி போயிருந்தால் அந்த சீன் படத்தில் வந்திருக்கும். வராமல் தடுத்து விட்ட்டார்கள். மேலும் அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த 80’ஸ் நடிகர்களும் நடிகைகளும் என்னை பாராடினார்கள்.மேலும் அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த ராதாரவியும் உன்னிடம் என்ன சொன்னார்களோ அந்த காட்சியில் மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு வா, மற்றவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி அவரும் எனக்கு துணையாக இருந்தார் என்று அனைவருக்கும் நன்றியை கூறி தன் அனுபவத்தை பகிர்ந்தார் சுகன்யா. இதைக் கூறிய அவர் இந்த பிரச்சினையாலயே இந்தியன் - 2 படத்தில் திரும்பவும் என்னை எப்படி அழைப்பார்கள் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.