Connect with us

Cinema News

ராமருக்கு பாட்டுப் போட்ட ராமராஜன் ஜோடி!.. லேடி சூப்பர்ஸ்டாரும் ஒரு பாட்டுப் போடுவாரா?..

அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேத் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் அதன் அருகே நிலம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆதிபுருஷ் படத்தில் ராமராகவே நடித்த நடிகர் பிரபாஸ் 50 கோடி ரூபாய் நிதி அளித்ததாக உருட்டுக்களும் உருட்டப்பட்டன. விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வரும் அர்ஜுன் சமீபத்தில் மோடியை சந்தித்து நானும் ஒரு கோயில் கட்டியிருக்கேன் வந்து பாருங்க என அழைப்பே விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: நண்பேன்டாவுக்கு ஆப்பு வச்ச சந்தானம்!.. ஆனாலும் ரகசியமா உதவும் உதயநிதி ஸ்டாலின்.. எப்படி தெரியுமா?..

மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் பங்கேற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகை சுகன்யா ராமருக்காக பிரத்யேகமாக பாடல் ஒன்றை எழுதி இசையமைப்பாளரிடம் கொடுத்து தனது சொந்தக் குரலிலேயே அந்த பாடலை உருவாக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ராம பக்தர்களை பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ராமராஜனின் கோபுர தீபம், விஜயகாந்தின் சின்னக் கவுண்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சுகன்யா இப்படியொரு பக்திமானா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 54 வயதாகும் சுகன்யா தீவிர ராம பக்தை என்பதால் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், பிரத்யேகமாக ராமருக்கு பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர்.

இதையும் படிங்க: அயலானை பிரிஞ்சி இருக்க முடியல போல! பிறந்த நாள் ட்ரீட்டாக சிவகார்த்திகேயன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்

லேடி சூப்பர் ஸ்டார் ஏதாவது ராமருக்கு பாட்டுப் போட்டு சர்ச்சையில் இருந்து தப்பிக்க ஐடியா இருக்கா? என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C2UwKTER-2p/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

google news
Continue Reading

More in Cinema News

To Top