இந்த நடிகையை நினைவில் இருக்கா?...நெருப்பு மேல் நின்று டயலாக் பேசிய நடிகை இவர்தான்...!

by sankaran v |   ( Updated:2022-04-19 16:22:59  )
இந்த நடிகையை நினைவில் இருக்கா?...நெருப்பு மேல் நின்று டயலாக் பேசிய நடிகை இவர்தான்...!
X

Sulakshana

நடிகை சுலக்ஷனா...80, 90 கால கட்டத்தில் தமிழ்சினிமாவைக் கலக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடிக்க வந்து 54 ஆண்டுகள் ஆகின்றன. சிவாஜி, ரஜினி, கமல் மற்றும் கன்னட பட உலகின் சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்தவர்.

கே.பாக்யராஜின் தூறல் நின்னு போச்சுபடத்தில் அறிமுகமானார். தமிழ்ப்பட உலகில் இவருக்கு சிறந்த வரவேற்பைக் கொடுத்த படம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான சிந்து பைரவி. இவர் தனது அனுபவங்களைப் பகிர்கிறார்.

sulakshana

சின்ன வயசுல என் தாத்தாவோட சினிமா சூட்டிங் பார்க்க போனேன். அப்போ சௌகார் ஜானகி அம்மாவோட காவியத்தலைவி படம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்க ஒரு வடநாட்டு பையன் நடிக்க வராம ரொம்ப நேரமாக கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தான்.

நான் அவன்கிட்ட போயி இது கூட பண்ணத் தெரியாதா...இப்படி கையை வச்சிக்கிட்டு இப்படி சொல்லுன்னு டயலாக்கத் தெளிவா சொன்னேன்...அதைப் பார்த்துக்கிட்டு இருந்த கே.பி. சார்...நீ அவனுக்கு சொல்றீயே...நீ இந்தக் காட்சியில நடிச்சிக்காட்டுவியான்னு கேட்டாரு...

இதுல என்ன இருக்கு...நான் நடிச்சிக்காட்டுறேன்னு சொல்லி அழகா டயலாக், கை அசைப்பு என பிரமாதமா பண்ணிக்காட்டுனேன். அது கே.பி. சாருக்கு ரொம்ப இம்ப்ரஸாயிடுச்சு. உடனே அந்தப் பையன அனுப்பிட்டு என்ன அந்தக் கேரக்டர்ல போட்டு நடிக்க வைச்சாரு. அதுதான் எனக்கு முதல் படம். பேபி டாலின்னு பேரு வச்சாங்க. எங்க அம்மாவும் என்னை நடிக்க வைச்சாங்க. எனக்கு ஹீரோயினாத் தான் நடிக்கணும்னு ஆசை. பாரதிராஜா சாரோட கிழக்கே போகும் ரயில் படத்திற்கு டெஸ்ட்டுக்கு போனேன்.

நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்கே...போன்னு அனுப்பிச்சிட்டாங்க.. நிழல்கள் படத்தில நீ ரொம்ப ஒல்லியா இருக்கன்னு அனுப்பிச்சிட்டாங்க...புது ஹீரோயின் வேணும்னா முதல்ல என்ன கொண்டு போய் நிறுத்திருவாங்க...அவங்க இல்லாத குறையை எல்லாம் சொல்லி திரும்ப வீட்டுக்கு அனுப்பிருவாங்க....

சோ...மனசுல ஒரே பீலிங்...ஹைட் இல்லங்கறாங்க...குண்டு இல்லங்கறாங்க...மெச்சூரிட்டி இல்லங்கறாங்க....அப்போ தெலுங்குல சர்வோதயம்ங்கற படத்துல ஒரு ஹீரோயின் வாய்ப்பு...கிடைச்சது...நல்லா போனது. தொடர்ந்து கன்னடத்தில ராஜ்குமார் சாரோட நடிக்கற வாய்ப்பு கிடைச்சது. அதைப் பார்த்து கே.பாக்யராஜ் சார் ஹீரோயின் தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்ல அங்கப் போனேன். பாக்யராஜ் சார் என்னென்னவோ கேக்காரு...நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்...

அப்போ நான் மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன்...கண்டிப்பா இந்த சான்ஸ் நமக்கு இல்லன்னு...அப்போ பாக்யராஜ் சார் என்னப் பார்த்து நீ ஏன் மூடு ஆஃப்பாருக்கேன்னு கேட்டாரு. இல்ல சார்...அதெல்லாம் இல்ல சார்...உனக்கு சிரிக்கத் தெரியாதா...ஓ...நல்லா சிரிப்பேன் சார்...னு சொன்னேன்...அப்புறம் அவரு..

அங்கேயே ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தாரு. முதன் முதலா காபி ஆறிப்போகுது...எடுத்துக்கங்க என்ற அந்த சீனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தாரு. அப்போ அவரு சொன்னதை நான் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..அப்புறம் அவரே ஓகே ஓகே இந்தப் பொண்ண வச்சே இந்தப்படத்தை நாம பண்ணலாம்னு சொல்லிட்டாரு...

அடுத்த நாளே பொள்ளாச்சி போனோம். அங்கே போயி கூட எனக்கு டென்ஷன் தான். ஒரு நாள் சூட்டிங் முடிஞ்சு டைரக்டர் சொல்றாரு...நாளைக்கு ரஷ்சஸ் எல்லாம் வருது. வந்து நீ நல்லா இருந்தேன்னா கண்டினியு ஆவே...ங்கறாரு. இல்லேன்னா இப்படியே வண்டி ஏறி உன்னை அனுப்பிச்சிருவேன்னாரு. பரவாயில்ல சார்...வண்டி ஏத்தி அனுப்பிச்சிருங்க...

ஒண்ணும் பிரச்சனை இல்ல...மறுபடியும் காலேஜ் போகப்போறேன்.. அவ்ளோ தான..ஒண்ணும் இல்ல..ன்னு சொன்னேன். ஆனா...அதெல்லாம் நடக்கல...ரஷ்சஸ் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. முதல் நாள் சூட்டிங் நடிச்சப்போ ரொம்ப கான்பிடண்ட்டா இருந்தேன்...கொஞ்சம் கூட தயக்கம் இல்ல...சார் லெப்ட் லுக்கா...ரைட் லுக்கான்னு கேட்பேன்...அப்போல்லாம் என்னை ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க...மேடம் லுக்கு கேக்குறாங்க..லெப்டா...ரைட்டான்னுட்டு...ன்னு சொல்லி ரொம்ப ஓட்டுவாங்க...சொல்வாங்க..

சாவித்திரி அம்மா, ஸ்ரீதேவி, பத்மினி அம்மா இவங்க தான் எனக்கு பிடிச்சவங்க. இவங்கள மாதிரி நடிக்கணும்னு ஆசை. தூறல் நின்னு போச்சு படத்தில அழ சொன்னா அழ மாட்டேன்...எவ்ளோ சொன்னாலும் அழுகை வர மாட்டேங்குது....

பார்த்தாரு...பிரேக் டைமாயிக்கிட்டு இருக்கு...அழ மாட்டேங்குற....ன்னு பளார் ஒண்ணு உட்டாரு...அந்த டயலாக் எல்லாம் பேசி முடிச்சப்புறம் நான் ரெண்டு நாளா அவருக்கூட பேசல. நான் கெட்டுப்போகலங்கற டயலாக்க நிஜமான கொள்ளிக்கட்டை மேல நின்னுக்கிட்டு நடிச்சேன்...காலு வேகுது...டயலாக்கும் கரெக்டா சொல்லணும்...

Thooral ninnu poachu

அதை செஞ்சு முடிச்சிட்டேன்...கால் எல்லாம் கொப்புளம் கொப்புளமா வந்துடுச்சு...சார் நீங்க நடிக்க சொல்லிருந்தா நடிச்சிருப்பேனே சார்...பயர் மேல எல்லாம் நிக்க வச்சிட்டீங்க...ன்னு சொன்னேன்...அப்போ தாமா நடிப்பு உண்மையா வரும்...பார் உன் கண்ணெல்லாம் செவந்து போச்சு...கொஞ்சம் கஷ்டப்பட்டா அதுக்கு நிறைய பேரு கிடைக்கும்னு சொன்னாரு.

அப்போ அவரைக் கண்டா எனக்குப் பயமா இருக்கும்..அவரை பிடிக்கவே பிடிக்காது...கிசு கிசு ஏன் வந்ததுன்னு தெரியல...அந்த மாதிரி கத்திரிக்கா காதல் எல்லாம் ஒண்ணும் இல்ல...! கார்த்திக் சாரோட ரொம்ப க்ளோஸா இருப்பேன்...அவரு எனக்கு பிரதர்.

sindhbairavi sivakumar, suhashini, sulakshana

அவரு கூட தான் நிறைய படங்கள் பண்ணிருக்கேன்...கார்த்திக் என்னை எப்பவும் பாய் பிரண்ட்டுன்னு தான் சொல்வாரு. மோகன் சாரோட நடிச்சா நான் ரொம்ப கலாட்டா பண்ணுவாரு. அவரு வெஜிடேரியன். என் பக்கத்துலயே வர மாட்டாரு. சுரேஷ் கூட நாலைஞ்சு படங்கள் பண்ணுனேன். சிவக்குமார் சார் தான் என்னை பண்ணாடை பண்ணாடைன்னு சொல்வாரு.

கிளிசரின் போட்டு அழறது அவ்ளோ ரியலா வராதுன்னு அமிர்தாஞ்சன் எல்லாம் போட்டு கண்ணை ரெட்டா ஆக்கி அழ வைப்பாரு. ஏன் நம்ம கண்ணை மூடி ரியலா அழக்கூடாதுன்னு நினைச்சி ரியலா அழுவேன்...நான் அழணும்னு நினைச்சா என் கண்ணுல நிஜமா தண்ணி வரும்...எவ்வளவு தூரம் வரும்நேரத்துக்கு வரணும்ங்கறது கூட என் கன்ட்ரோல்ல இருந்தது.

Next Story