பொய் சொல்லித்தான் நடிக்க வந்தேன்!.. அத்தனை பேரும் நம்பிட்டாங்க.. நீண்ட நாள் உண்மையை மறைத்த நடிகை..

Published on: April 27, 2023
sulak
---Advertisement---

80,90களில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் அசத்தியவர் நடிகை சுலக்‌ஷனா. ரஜினி, கமல், சிவாஜி, பாக்யராஜ் என அனைத்து முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சுலக்‌ஷனா.

‘தூரல் நின்னு போச்சு’ என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழி சினிமாக்களிலும் கலக்கியிருக்கிறார். தமிழில் சுலக்‌ஷனாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘சிந்து பைரவி’. இந்தப் படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் போது சுலக்‌ஷனா மிகவும் குண்டாக இருந்திருக்கிறார். ஆனால் பாலசந்தர் என்னுடைய சிந்து பைரவி இப்படித்தான் இருக்க வேண்டும், உடம்பை குறைச்சிடாதே என்று சொன்னாராம். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது.
ஆரம்பித்திலேயே நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் தான் இருந்திருக்கிறார் சுலக்‌ஷனா.

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் இவர் தான் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் அந்த நேரம் சுலக்‌ஷனா பார்ப்பதற்கு மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததனால் இவரை ரிஜக்ட் செய்து விட்டனராம். மேலும் பல இடங்களில் தனக்கு ஒன்றும் தெரியாது
என்பதை போலவே ஒரு இமேஜை கிரியேட் செய்து வைத்திருக்கிறார் சுலக்‌ஷனா.

உன்னால் முடியாது தம்பி படத்தில் கூட கமலிடமும் தனக்கு நடனம் ஆட வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையிலேயே கதக்களி, பரதம் நன்கு ஆடத்தெரிந்தவர் தானாம் சுலக்‌ஷனா. பார்ப்பதற்கு முகத்தை அப்பாவி போலத்தான் வைத்திருப்பார். சேலை கட்டத்தெரியாது என்றும் நகைச்சுவை பண்ணத் தெரியாது என்றும் பல இடங்களில் பல இயக்குனர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.

இதையும் படிங்க : மொத்த டிராஃபிக்கையும் க்ளியர் பண்ண ரஜினி!.. மும்பையில் மாஸ் காட்டிய தலைவர்.. எப்படி தெரியுமா?..

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சுலக்‌ஷனா நான் ஒரு சரியான வில்லி என்றும் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் ஆனால் ஒன்றுமே தெரியாது என்றுதான் சினிமாவிற்குள் வந்தேன் என்றும் கூறியிருக்கிறார். மற்றவர்களை நன்கு கிண்டல் அடிப்பேன், நன்றாக பேசுவேன் என கூறி தன்னுடைய அனுபவங்களை அந்த பேட்டியில் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.