அவர் பேசுறத டெட்டால் ஊத்திதான் கழுவனும்! கமலை பற்றி நடிகை சொன்ன பகீர்

by Rohini |   ( Updated:2024-08-22 11:12:16  )
kamal
X

kamal

Actor Kamal:தமிழ் சினிமாவில் கமல் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல் என்றாலே திறமை ,நடிப்பு இதைத்தான் சொல்வார்கள். இன்று ஒரு உலக நாயகனாக அனைத்து திறமைகளும் உள்ளடக்கிய கலைஞராக இந்த தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

ஆரம்பத்தில் ஒரு லவ்வர் பாயாக அனைத்து இளம் பெண்களின் கனவு நாயகனாக உலா வந்த கமலை பற்றி நடிகை சுமித்ரா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது சுமித்ராவுடன் நடிக்கும்போது பல லூட்டிகள் அடிப்பாராம் கமல்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யாவே.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?

இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு அம்மாவாக நடித்திருப்பார் சுமித்ரா. சுமித்ரா படப்பிடிப்பிற்கு வரும்போதெல்லாம் அவர் அப்பாவுடன் தான் வருவாராம் .

இதை கிண்டல் பண்ணும் விதமாக கமல் ‘இவ வரும் போதெல்லாம் சிஐடியுடன் தான் வருவாள்’ என்று கூறுவாராம். கமல் எப்போதும் ஃபிரீயாக இருக்கவேண்டும் என விரும்புவார். அப்பாவுடன் வருவதால் எந்த ஒரு சேட்டையும் பண்ண முடியாத காரணத்தால் அப்படி சொல்லி கிண்டல் பண்ணுவாராம் கமல் என சுமித்ரா கூறுகிறார்.

இதையும் படிங்க: இந்தியாவுல அவன் ஒருத்தன்தான்!.. சூரியை விட்டு விஜய் சேதுபதி பக்கம் போன மிஷ்கின்…

அதுமட்டுமல்லாமல் அவர் செட்டில் இருந்தாலே டெட்டால் ஊத்தி கழுவனும் என சுமித்ரா கூறினார். ஏனெனில் அவ்வளவு தப்பான வார்த்தைகளில் பேசி கிண்டலும் அடிப்பாராம் கமல். செட்டில் கமல் இருந்தாலே கலகலப்பாக இருக்கும் எனக் கூறினார் சுமித்ரா.

sumi

sumi

மேலும் சிங்காரவேலன் படப்பிடிப்பின் போது அம்மா அம்மா என கூப்பிடாமல் சுமி சுமி என்றுதான் கூப்பிடுவாராம் கமல். இத்தனை நாளாக லவ் பண்ணிக் கொண்டிருந்த பெண்ணை இப்பொழுது அம்மானு கூப்பிட சொன்னால் எப்படி இருக்கும் என சுமித்ராவை பற்றி கூறுவாராம் கமல்.

இதையும்படிங்க: நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!…

Next Story