இந்த சிரிப்புலதான் ஃபிளாட் ஆனோம்!.. சுனைனாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த பல நடிகைகளில் சுனைனாவும் ஒருவர். நகுல் கதாநாயகனாக அறிமுகமான காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
சுனைனா முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு படங்களில்தான். அதன்பின் மலையாள மற்றும் கன்னட படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், வானம், நம்பியார், தொண்டன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
ஆனால், சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடிக்க மட்டுமே இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. லத்தி படத்தில் விஷாலின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது ரெஜினா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சில ஹிந்தி சீரியல்களிலும் சுனைனா நடித்துள்ளார். அதோடு, க்யூட்டான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் சுடிதாரில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து அசரடித்துள்ளார்.