சுனைனாவின் 'மாப்பிள்ளை' இவர்தான்... புலம்பும் ரசிகர்கள்!

தமிழின் மூத்த நடிகைகளில் ஒருவரான நடிகை சுனைனா (35) சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால் மாப்பிள்ளை யாரென்பதை மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார்.

இதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து இருந்தாலும், தனது வருங்கால கணவர் குறித்து அவர் அமைதி காத்தது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் இருப்பவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் சுனைனா மணக்க இருக்கும் மாப்பிள்ளை குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அதன்படி அவர் மணம் புரியவிருப்பது துபாய் யூடியுபர் கலீத் அல் அஹமத் என்பவரைத் தானாம்.

இருவருக்கும் சமீபத்தில் நிச்சயம் முடிந்து விட்டாலும் திருமணம் வரை அமைதி காக்க நினைக்கிறாராம் சுனைனா. இதனால் தான் வெளிப்படையாக காதலன் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளத்தில் சுனைனா பதிவிட்ட அதே புகைப்படத்தை கலீத் பகிர்ந்து தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்துள்ளார். மேலும் திருமண வேலைகளுக்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் தெரிகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி திடீர்னு அறிவிச்சு ஷாக் கொடுத்துட்டீங்களே', 'எங்க இருந்தாலும் நல்லா இருங்க' என அவரை டேக் செய்து சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

யூடியுபில் சுமார் 3௦ லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலீத்தின் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். பொழுதுபோக்கு சேனலாக இதை அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகுல் ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சுனைனா தொடர்ந்து மாசிலாமணி , வம்சம் , நீர்ப்பறவை , சமர் , வன்மம் , தெறி உள்ளிட்ட படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் சுனைனா திருமணத்திற்கு பிறகும் நடிப்பாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. விரைவில் சுனைனா - கலீத் அல் அமேரி திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story