வெள்ளை உடையில் பார்பி போல இருக்கும் நடிகை...சொக்கிப்போன ரசிகர்கள்
நடிகை சுரபி டெல்லியை சேர்ந்த மாடல் அழகி. நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால் நடிப்பு பயிற்சி பெற்று நடிப்பில் திறமையை வளர்த்துக் கொண்டார்.
இவரது திறமைக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது மாடலிங் துறை. இவரது குளு குளு அழகும், குழந்தை முகமும் பல விளம்பர வாய்ப்புகளை கொடுத்தது.
2013 ஆம் ஆண்டு "இவன் வேறமாதிரி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார், தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த இவருக்கு மேலும் வாய்ப்புகள் குறைந்த நிலையில், தெலுங்கு பட உலகிற்கு மாறினார்.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கொஞ்சம் நிலைத்து நிற்க, நடிகை சுரபி கொஞ்சம் கவர்ச்சியாக நடித்து மர்கெட்டை தக்கவைத்து கொண்டார்.
திடீர் என உடல் எடையை குறைத்த நடிகை சுரபி, புதிய பட வாய்ப்புகள் எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை உடையில், உடல் வனப்பை காட்டும் புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.