வீரமங்கையா நடிக்கிறது ஓகே! உங்க வாய்ஸ்ல மட்டும் பேசிராதீங்க..வேலு நாச்சியாராக அவதாரம் எடுக்கும் நடிகை

veera
Actress Shuruthi Hasan: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தியே பெரும்பாலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஹீரோவுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா? நாங்களும் சளைச்சவங்க இல்ல என்பதை பல முன்னணி ஹீரோயின்கள் நிரூபித்து வருகிறார்கள்.
ஹீரோயின் என்றாலே ஹீரோவுக்கு ஜோடியாக டூயட் ஆடுவதும், பக்கத்தில் நிற்பதும் என்ற மனநிலை மாறி ஓ இந்த நடிகை நடித்த படமா? என்று ஓடி வந்து பார்க்கும் அளவுக்கு சூழ்நிலையை அமைத்திருக்கிறார்கள். அதில் நயன்தாரா, ஜோதிகா, அனுஷ்கா போன்ற நாயகிகள் தங்கள் படங்களின் மூலம் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.
இதையும் படிங்க: செம யூத்தா மாறிட்டாரே ஏ.கே.!. தல நீ வேறலெவல்!.. ஷாலினி பகிர்ந்த வைரல் புகைப்படம்…
இந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு கதாபாத்திரம் வேலு நாச்சியார். வரலாற்றில் ஒரு சிறப்பு வாய்ந்த வீரமங்கையாக ஜொலித்தவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்க கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட இயக்குனர்கள் போராடி வருகிறார்கள்.
முதலில் இந்தப் படத்தை நயன்தாராவை வைத்து எடுக்க திட்டமிடப்பட்டதாம். ஆனால் ஏதோ சில பல காரணங்களால் நயன்தாரா டென்ஷன் ஆகிவிட்டாராம். அதனால் இந்த படத்தில் இருந்து நயன் விலகிவிட்டாராம். ஒரு வேளை இந்த கதையில் நயன் நடித்திருந்தால் கண்டிப்பாக நயனுக்கு லைஃப் லாங் ஒரு நல்ல இமேஜை இந்தப் படம் பெற்றுத் தந்திருக்கும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.
இதையும் படிங்க:
ஆஃப் சேரின்னாலும் அத மூட மாட்டேன்!.. பாவாடை தாவணியில் கிளுகிளுப்பு காட்டும் பூஜா ஹெக்டே
அதனால் இந்தப் படத்தை இப்போது ‘தூங்காவனம்’ பட இயக்குனர் ராஜேஷ் எம் செல்வாதான் எடுப்பதாக கூறுகிறார்கள். இவர் கமலிடம் உதவியாளராக இருந்தவர். இப்போது இந்த வேலு நாச்சியார் கதையில் சுருதிஹாசனை வைத்து எடுக்க திட்டமிட்டுவருகிறார்களாம். வீர மங்கை என்றாலே அதற்கேற்ற பயிற்சி, சண்டை என களத்தில் ஆட வேண்டியிருக்கும்.
ஏற்கனவே சுந்தர் சியின் சங்கமித்ரா படத்திற்காக சுருதிஹாசன் அந்த சண்டை , வாள் பயிற்சிகள் எல்லாம் கற்றுக் கொண்டிருந்தாராம். அதனால் இந்தப் படத்தில் நடிக்க சுருதிஹாசனுக்கு இன்னும் எளிதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்படி பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தக் கூடிய ஒரே ஒரு நடிகை என்றால் அது அனுஷ்கா மட்டும்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதையும் படிங்க: போண்டாமணி கடனை கேப்டன் அடைச்சாரா? அதெல்லாம் இல்லைங்க.. நடிகர் சொன்ன திடுக்கிடும் தகவல்