உலகநாயகனோ நவரச நாயகனோ… ஆளவிடுங்கடானு கும்பிடு போட்ட பிரபல நடிகை… ஏன்னு தெரியுமா?...

தமிழ் சினிமாவில் தனது காந்த பார்வையால் தனக்கென தனி பெண் ரசிகைகளை சம்பாதித்த பல நடிகர்களும் உண்டு. கமல், ரஜினி, கார்த்திக் என பல நடிகர்களும் தங்களுகென தனி தனி ஸ்டைலை உருவாக்கி சினிமா உலகையே ஆக்கிரமித்தனர்.

அதைபோல் சினிமாவில் கதாநாயகியின் பங்கும் மிகவும் இன்றியமையாதது. ஆரம்பத்தில் நடிகைகள் பெரிய அளவில் கவர்ச்சியை காட்டியதில்லை. கவர்ச்சி நடிகைகள் என தனி பட்டாளமே உண்டு. பின்னாளில் கவர்ச்சிக்கென தனி நடிகைகள் இல்லாமல் இயல்பாக நடிக்கும் நடிகைகளே கவர்ச்சியை காட்ட தொடங்கினர்.

இதையும் வாசிங்க:நானே நடிகன்… என்னிடமே நடிப்பா… சிவாஜியிடம் மாட்டி கொண்ட பத்திரிக்கையாளர்… நடிகர் திலகம்னா சும்மாவா!..

ஆனால் ஒரு சில நடிகைகள் குறிப்பிட்ட அளவு திரைப்படங்களே நடித்திருந்தாலும் சினிமாவில் அந்த அளவுக்கு கவர்ச்சியை வெளிப்படுத்தியதில்லை. ஆனாலும் அவர்களின் நடிப்பு மக்களை பெரிதளவில் கவர்ந்தது. மேலும் அவர்கள் நடித்த திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றுதான் கூறவேண்டும்.

நடிகை சரிதா, நதியா போன்ற சில நடிகைகள் சினிமாவில் கடைசிவரை எந்தவொரு கவர்ச்சியான நடிப்பையோ வெளிக்காட்டவில்லை. அந்த வரிசையில் உள்ளவர்தான் நடிகை சுவலெட்சுமி. இவர் மொத்தமே 13 திரைப்படங்கள்தான் நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:ராமமூர்த்திக்கும் பாதி கொடுங்க!… வாங்குன சம்பளத்தை பங்கு போட்ட எம்.எஸ்.வி… இப்படியும் ஒரு மனுஷனா!…

கொல்கத்தாவில் பிறந்த இவர் தமிழில் ஆசை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தன்னுடைய கோட்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். லவ் டுடே, மாயி போன்ற பல திரைப்படங்களில் தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார். பொதுவாக சினிமாவில் கார்த்திக்குக்கு மயங்காத பெண்கள் என்று எவருமே இல்லை. கார்த்திக் பொதுவாக தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தனது காதல் வலையில் சிக்க வைப்பார் என்ற பொதுவான கருத்துகளும் உண்டு.

suvalakshmi

ஆனால் சுவலெட்சுமியோ கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை என சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதிரியான கவர்ச்சி நடிப்பில் ஈடுபாடு இல்லாததால்தான் கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் சுவலெட்சுமி அதை நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த அஜித்! படமோ ப்ளாக் பஸ்டர் ஹிட்

 

Related Articles

Next Story