suriya45
suriya45

சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் சூர்யா 45 படத்தில் லப்பர் பந்து நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா கடந்த இரண்டு வருடங்களாக எடுத்து வந்தார்.

இதையும் படிங்க: சைலன்ட்டா சம்பவம் செஞ்ச லக்கி பாஸ்கர்!.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?..

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. தொடர்ந்து இப்படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் படக்குழுவினர்தான். பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மேடைக்கு மேடை படம் குறித்து பில்டப் மேல் பில்டப் கொடுத்திருந்தனர். ஆனால் கொடுத்த பில்டப்புக்கு படம் ஒர்த் இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகின்றது. கங்குவா படமும் தோல்வியை சந்தித்த காரணத்தால் மிகுந்த சோகத்தில் இருக்கின்றார் நடிகர் சூர்யா.

swasthika
swasthika

அடுத்ததாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்திற்கு சூர்யா 45 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் படத்தின் பூஜை தொடங்கியிருந்தது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 19 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவும் திரிஷாவும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் லப்பர் பந்து திரைப்படத்தில் யசோதா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வஸ்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: வீர தீர சூரன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!.. தமிழ்நாட்டு உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!…

லப்பர் பந்து படத்தில் தினேஷ் அவர்களுக்கு மனைவி கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்து பலரின் பாராட்டையும் பெற்றிருந்தார் ஸ்வஸ்திகா. இதனால் தற்போது சூர்யா 45 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.