'சொகுசு' கார் வாங்கிய சீரியல் நாயகி...எல்லாம் 'அந்த' படத்தோட மாயம்!
அரவிந்த் சாமி கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் படம் கிராமத்து உணர்வுகளை எடுத்துக்கூறி மக்கள் மனதிலும், வசூலிலும் நல்ல வரவேற்பினை பெற்றது.
குறிப்பாக இந்த படம் ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெற்றது. சண்டை, ஆபாச பாட்டு ஆகியவை இல்லாமல் வந்ததால் அனைவருக்கும் இப்படம் பிடித்து போனது. படத்தில் சில குறைகள் இருந்தாலும் பொதுவாக ஓகே ரகம் என இதற்கு விமர்சனங்கள் வெளியாகின.
இதையும் படிங்க: மகனின் 2-வது திருமணம்!.. எமோஷனலாக பதிவிட்ட நாகார்ஜுனா.. என்ன சொல்லிருக்காரு பாருங்க ..!
குறிப்பாக அண்ணன்-தங்கச்சி பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் நமக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என பெண்களை ஏங்க வைத்திருந்தது. இதில் அரவிந்த் சாமி தங்கையாக ஸ்வாதி கொண்டே நடித்திருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் புகழ் பெற்றிருந்த அவர் இந்த படத்திற்கு பிறகு பலருக்கும் பிடித்த நடிகையாகவும் மாறியுள்ளார். இந்தநிலையில் அண்மையில் ஸ்வாதி கொண்டே தன்னுடைய அப்பா-அம்மாவுடன் சென்று சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட ரசிகர்கள் பலரும் அவரின் புதிய காருக்கு வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர். இந்த படத்திற்கு முன்னால் பெரிதாக வெளியில் தெரியாத ஸ்வாதி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதோடு மேலும் சில படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. எது எப்படியோ சீக்கிரமே ஒரு வெள்ளித்திரை என்ட்ரி ஸ்வாதிக்கு இருக்கும் என்பது தெரிகிறது.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… ரோகிணி மீது வலுக்கும் சந்தேகம்… செந்தில் எடுத்த திடீர் முடிவு!..