Connect with us
banner

விஜய் பப்ளிசிட்டி பண்ணுவாரு… அஜித் பண்ணவே மாட்டாரு…ரெண்டுபேரையும் அங்குல அங்குலமா வேறுபடுத்தி காட்டிய அந்த நடிகை…

ajith_main_cine

Cinema News

விஜய் பப்ளிசிட்டி பண்ணுவாரு… அஜித் பண்ணவே மாட்டாரு…ரெண்டுபேரையும் அங்குல அங்குலமா வேறுபடுத்தி காட்டிய அந்த நடிகை…

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய்க்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் இருவருக்கும் ஜோடியாக நடித்த நடிகை ஸ்வாதி. விஜய் நடித்த தேவா படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தார். தேவா படம் விஜய் கெரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாகும்.

ajith1_cine

அதேபோல் அஜித்தின் முதல் படமான ’வான்மதி’ படத்திலும் ஸ்வாதியே ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இருவருடனும் தலா மூன்று படங்கள் நடித்த பெருமை ஸ்வாதிக்கு இருக்கிறது. இந்த நிலையில் இவரிடம் அஜித் மற்றும் விஜயை பற்றி கேட்கையில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.

ajith2_cine

இருவருக்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்து பார்த்து அழகாக கூறினார். அவர் கூறுகையில் “ அஜித் அப்படியே விஜய்க்கு நேர்மாறானவர். விஜய் செட்டில் யாருடனும் பேசமாட்டார். ஆனால் அஜித் அறிமுகமான புதிதிலயே எல்லாரிடமும் போய் சகஜமாக பழகுவார்.

ajith3_Cine

மேலும் அஜித் எல்லாருக்கும் போய் தானாகவே உதவிகளை செய்வார். ஆனால் அது யாருக்கும் தெரியாது. பப்ளிசிட்டி பண்ண மாட்டார். அதேபோல் விஜயும் உதவிகளை செய்வார். ஆனால் அவர் செய்வது எப்படியாவது வெளியே தெரிந்து விடும். அதை ரசிகர்கள் பப்ளிசிட்டி ஆக்கிவிடுவார்கள். மற்றபடி இருவரும் மதிக்கக்கூடிய நண்பர்கள் தான்” என அவர் கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top