Tamannah: தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. தமிழில் கல்லூரி என்கிற படம் மூலம் அறிமுகமானார். சொந்த மொழி ஹிந்தி என்றாலும் பாலிவுட்டில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவேதான், தமிழ், தெலுங்கு மொழி படங்கள் பக்கம் வந்தார்.

தமன்னாவின் பால் மேனி நிறம் இயக்குனர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துப்போக தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விஜயுடன் சுறா படத்தில் நடித்தார். ஆனால், ‘நடிக்கும்போதே இந்த படம் ஓடாது என எனக்கு தெரியும்’ என ஊடகம் ஒன்றில் சொல்லி விஜய் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார். அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், விக்ரமுடன் ஸ்கெட்ச், கார்த்தியுடன் பையா, தனுஷுடன் படிக்காதவன், விஷாலுடன் கைதி, கத்தி சண்டை போன்ற படங்களில் நடித்தார்.

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து பேன் இண்டியா பட ரசிகர்களிடம் பிரபலமானர். இந்த படத்தில் அதிரடியாக சண்டையெல்லாம் போட்டு அசத்தியிருந்தார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்றாலும் ஜெயிலர் படத்தில் ஒரு வேடத்தில் வந்து ‘காவாலா’ பாடலுக்கு இடுப்பை ஆட்டி ஆட்டி நடனமாடி ரசிகர்களை ஈர்த்தார். ஒருபக்கம், ஹிந்தி வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டு வருகிறது. இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்துக்கொள்வதும் நடக்கிறது. இது திருமணத்தில் முடியுமா என்பது தமன்னா சொன்னால் மட்டுமே தெரியவரும். இந்நிலையில், மில்க் பியூட்டியை காட்டும் வகையில் போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.
