
Cinema News
காவாலா பாடலில் நான் செய்தது தப்பு!. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே தமன்னா!…
Tamannah: வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் ஹிந்தி சினிமா பக்கம் போகாமல் தமிழ், தெலுங்கு என வந்தவர்தான் தமன்னா. தமிழில் கல்லூரி என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்தாலும் அந்த படம் ஓடவில்லை. அதன்பின் கவர்ச்சி காட்ட துவங்கினார்.
பால் போன்ற நிறத்தை கொண்டிருப்பதால் அவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைக்க துவங்கினார்கள். தமிழில் வியாபாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படியே ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். அங்கும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
விஜயுடன் சுறா படத்திலும், அஜித்துடன் வீரம் படத்திலும் நடித்தார். ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா ஹீரோக்களுக்கும் ஜோடி போட்டு நடித்தார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்திலும் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா என்கிற பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார்.
கவர்ச்சியான உடையில் கொளுக் மொழுக் அழகை காட்டி இடுப்பை ஆட்டி ஆட்டி அந்த பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்து ஜெயிலர் படத்திற்கே பெரிய புரமோஷனாக மாறியது. பலரும் இப்பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ போட்டார்கள்.
இந்த பாடல் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் தமன்னா. வட இந்தியாவில் பல நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்து இந்த பாடலுக்கு நடனமாட சொன்னார்கள். இதில், பல கோடிகள் கல்லா கட்டினார் தமன்னா. இப்போது ஹிந்தி வெப் சீர்யஸ்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதில், படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தமன்னா ‘காவாலா பாடலுக்கு நான் முழுமையான பங்களிப்பை கொடுக்கவிலை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூட நன்றாக பண்ணியிருக்கலாம் என நினைக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: பழிக்குப் பழி வாங்கினாரா எம்ஜிஆர்? சந்திரபாபு ஏழையாகி இறக்கக் காரணம் என்ன?