ஓசியில கிடைச்சா ஊருக்கே விருந்து வைக்கிற கதையால இருக்கு! அல்லு பண்ணும் தமன்னா! அதுக்கு இப்படியா?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இப்போது பட வாய்ப்புகள் இன்றி வெப் சீரிஸில் நடித்துக் கொண்டு வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் சீரிஸில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது எல்லாருக்கும் பரீட்சையமான ஒரு நடிகை. அதுவும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. அந்த வெப் சீரிஸில் இப்படி ஒரு பிட்டு பட நடிகையை போல் நடித்திருப்பது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் அதைப் பற்றி இதுவரை அம்மணி கவலை கொண்டதைப் போல் தெரியவில்லை. மேலும் அந்த சீரிஸில் நடித்திருக்கும் விஜய் வர்மாவைத்தான் தமன்னா திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.
கல்லூரி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கும் போது அவரின் மேனேஜர் ஒருவரின் பைக்கில் பின்னாடி அமர்ந்து கொண்டு சில சமயங்களில் படப்பிடிப்புக்கு வருவாராம் தமன்னா. அப்பவே நல்ல வெளீர் நிறத்துடன் காணப்பட்ட தமன்னாவை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம்.
ஆனால் இப்போது 2 கோடி வரை சம்பளம் வாங்கும் தமன்னா எப்பொழுதும் தன்னுடன் 7 பேரை உதவியாளர்களாக அழைத்துக் கொண்டு வருகிறாராம். அவர்களுக்கு தினமும் 1.50 லட்சம் சம்பளமாக கொடுக்கிறாராம். போதாக் குறைக்கு ஃபிளைட்டில் டிக்கெட் போடும் போது கூட தமன்னா அருகில் எப்பொழுதும் ஒரு காலியான இருக்கையையும் சேர்த்தே புக் பண்ண சொல்கிறாராம்.
ஏனென்றால் எந்த வித தொந்தரவும் இல்லாமல் தமன்னா இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறாராம். சமீபத்தில் கூட ஏதோ ஒரு விழாவில் கலந்து கொண்ட தமன்னாவிடம் ஒரு நபர் கை வைத்ததாக செய்திகள் வெளியானது. ஒரு வேளை அதற்காகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கான மொத்த செலவுகளும் அவர் கையில் இருந்து இல்லை, தயாரிப்பாளர் கையில் இருந்து தான் போடப்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : அகங்காரத்தின் திமிரா? அறிவு இல்ல? 150 கோடி சம்பளம் வாங்குனா பெரிய இவனா? யாருய்யா இந்த லேடி?